How does people at adharma side gets Veera Swargam?

Updated on March 6, 2019 in General
3 on February 28, 2019

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம :
ஸ்ரீமத் வரவரமுநயே நம :

ஸ்வாமின்,
உபன்யாசங்களிலிருந்து இதிகாச புராணங்களில் தர்ம யுத்தத்தில் மரணமடைபவர்கள் அனைவரும் வீர சொர்க்கம் அடைவார்கள் என்று கேள்விப்படுகிறோம். அதர்மத்தின் பக்கம் நின்றும் அதர்ம வழியிலும் தர்மத்திற்கு எதிராக போர் புரிபவர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக தர்மத்தை எதிர்த்து போர் புரியும் வீரர்களும் வீர சொர்க்கம் அடைவார்களா?
இது குழப்பமாக உள்ளது.
அப்படியானால் அதர்ம வழி செல்லும் தீவிரவாதிகளுக்கு துணையாக தர்ம வழியில் போர் புரியும் ராணுவ வீரர்களை எதிர்த்து போர் புரியும் எதிரி நாட்டு ராணுவ வீரர்களும் போரில் மரணமடைந்தால் சொர்க்கம் செல்வார்களா?
அருள் கூர்ந்து விளக்குமாறு ப்ரார்த்தித்து கொள்கிறேன்.

அடியேன் இராமானுஜதாசன்

 
  • Liked by
Reply

Sri Ramanuja Munaye Namaha,

Sri Velukkudi Krishnan Swami Guruve Namaha,

 

Dear BhagavAta,

 

ஸ்வாமியின் உபன்யாசங்களில் இருந்து அடியேன் புரிந்து கொண்டது.

ஷத்ரியர்கள்  (தர்மியோ அல்லது அதர்மியோ) போர்க்களத்தில் மரணம் அடைந்தால் மட்டும் , “முதலில்”  தாழ்ந்த லோகமான ஸ்வர்கத்தை அடைவார்கள், இது ஸாஸ்திர நியமனம். அதன்பின் அவர்கள் நரகம் மற்று லோகத்தில் பயணம் செல்லுவார்கள் அவற்வர்களில் கர்மத்தின் படி. ஆனால் ஷத்ரியர்கள் போர்க்களத்தில் மரணம் அடையவில்லை என்றால் , அவர் அவர்களின் அந்திம ஸ்ம்ருதியின் (Last minute thought in death bed)  படி அவர்கள், அந்த அந்த இடத்தை அடைவார்கள்

 அங்கு அவர்களுக்கு, கருட புராணத்தின் படி, அடி உதை உதவியால் பண்பட்ட  பின்பு, மனுஷ்ய பிறவி எடுக்கும் போது, பழைய குற்றங்களுக்கு கிடைத்த தண்டனை அவர்களின் நினைவில் வாசனையாக பதிந்து இருப்பதால். அவர்கள் அந்த குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

 

துரியோதனனும் அர்ஜுனனனும் தாழ்ந்த ஸ்வர்கம் சென்றபின், அவர்கள் வேறு எங்கு சென்றார்கள் என்று பெருமாளுக்கு மட்டும்தான் தெரியும்.

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan,

Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu.

  • Liked by
Reply
Cancel

Sri Ramanuja Munaye Namaha,

Sri Velukkudi Krishnan Swami Guruve Namaha,

 

ஸ்வாமியுடைய அருளால் மேலும் கூறுகிறேன்.

தீவிரவாதிகள் ஷத்ரியர்கள் அல்ல. ஷத்ரியர்கள் வேதத்தை பின்பற்றி உபநயனம் செய்தவர்கள். அப்படிபட்ட ஷத்ரியர்கள் அதர்மியாக இருந்தாலும், போர்க்களத்தில் மரணம் அடைந்தால், ஸ்வரகம் செல்லுவார்கள். தீவிரவாதிகள் ஷத்ரியர்கள் அல்ல, அதனால் அவர்கள் செய்த அதர்ம செயல்களுக்கு நரகம் செல்லுவார்கள்.

 

அங்கு அவர்களுக்கு, கருட புராணத்தின் படி, அடி உதை உதவியால் பண்பட்ட  பின்பு, மனுஷ்ய பிறவி எடுக்கும் போது, பழைய குற்றங்களுக்கு கிடைத்த தண்டனை அவர்களின் நினைவில் வாசனையாக பதிந்து இருப்பதால். அவர்கள் அந்த குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan,

Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu.

  • Liked by
Reply
Cancel
0 on March 6, 2019

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம :
ஸ்ரீமத் வரவரமுநயே நம :
பாகவதருக்கு நன்றி.
ஸ்வாமின், ஆனாலும் கேள்வி தீவிரவாதிகளைப் பற்றி அன்று. (தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும்) எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் பற்றி. அப்படியானால் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் ஷத்ரியர்கள் தானே (இன்றைய காலத்திற்கு ஏற்ப). எதிரி நாட்டு ராணுவ வீரர்களும் விதிகளுக்கு உட்பட்டு தான் நடப்பர் (சில நாட்டு வீரர்கள் சில நேரங்களில் வேறு மாதிரியாக இருக்கலாம்)
அப்பேற்பட்டவர்கள் அதர்மவாதிகளான தீவிரவாதிகளுக்கு துணையாக தர்ம வழியில் போர் புரியும் ராணுவ வீரர்களை எதிர்த்து போர் புரிந்து மரணமடைந்தாலும் சொர்க்கம் செல்வார்களா?

அடியேன் இராமானுஜதாசன்.

  • Liked by
Reply
Cancel