Srirangam in Divya Prabhandam

Updated on January 9, 2023 in Azhwars
4 on November 7, 2021

Srimathe Ramanujaya Namah, Sri Sriranga Narayana Jeeyar Saranam, Sri Velukkudi Swamigal Thiruvadigale Saranam! 

Swami adiyen have heard that there are 247 paasurams (equivalent to no. of letters in Tamil) that glorifies Srirangam divyadesam. However adiyen found 248 paasurams singing the glory of Srirangam. Please clarify Swami. 

Mudal Thiruvandathi – 6
Irandam Thiruvandathi – 28, 46, 70, 88
Moonrām Thiruvandathi – 62
Nānmuhan Thiruvandathi – 3, 30, 36, 60
Tiruchandavirutham 21, 49-55, 93, 119
Tiruvirutham 28
Thiruvoimozhi 7-2-1 to 11
Perumal Thirumozhi 1-1to 11, 2-1 to10 , 3-1 to 9, 8-10
Periyazhwar Thirumozhi 1-3-9, 2-7-2, 2-7-8, 2-9-4, 2-9-11, 3-3-2, 4-8-1 to 10, 4-9- 1 to 11, 4-10-1 to 10
Nachiar Thirumozhi 11-1 to 10
Tirumalai 1 to 45
Tiruppallieluchi 1 to 10
Amalanadippiran 1 to 10
Periya Thirumozhi 1-8-2, 3-7-6, 5-4-1 to 5-8-10, 6-6-9, 7-3-4, 8-2-7, 9-9-2, 11-3-7, 11-8-8
Thirukkurundāndagam 7, 12 ,13, 19
Thirunedunthāndagam 11 – 14, 18, 19, 23 – 25
Siriya Thirumadal 35
Periya Thirumadal 63

 

Prabhandam Count
Amalan Adi Piran 10
Irandam Thiruvandathi 4
Moonram Thiruvandathi 1
Mudhal Thiruvandathi 1
Nachiyār Thirumozhi 10
Nankam Thiruvandathi 4
Periya Thirumadal 1
Periya Thirumozhi 58
Periyalwar Thirumozhi 37
Perumal Thirumozhi 31
Siriya Thirumadal 1
Thiru Palli Ezhuchi 10
Thiruchchantha Viruththam 10
Thirukkurundāndagam 4
Thirumalai 45
Thirunedunthāndagam 9
Thiruvaimozhi 11
Thiruvirutham 1
Grand Total 248

 

adiyen,

Badrinarayana Ramanuja Dasan. 

 
  • Liked by
Reply
0 on November 9, 2021

This forum has gone to a whole new level by Devareer’s post.

Thanks for the classification.

Dasanudasan

  • Liked by
Reply
Cancel

Dhanyosmi Swami for your kind words. Eagerly looking forward to the answer.

Namaskaram,

adiyen today found the answer to this question so sharing it with all. The total count is 260. But if we exclude the 13 paasurams from Ramanusa Nootranthathi, the count is 247 sung Azhwars glorifying Thiruvarangam. Dhanyosmi! Below is the list of all 260 paasurams. 

Prabhadam

Pathu

TM

PNo

Paasuram

பெரியாழ்வார் திருமொழி

1

3

9

52 மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் *
செய்ய தடங்கண்ணுக்கு * அஞ்சனமும் சிந்துரமும் **
வெய்ய கலைப்பாகி * கொண்டு உவளாய் நின்றாள் *
ஐயா அழேல் அழேல் தாலேலோ * அரங்கத்து அணையானே தாலேலோ (9)

பெரியாழ்வார் திருமொழி

2

7

2

183 கரு உடை மேகங்கள் கண்டால் * உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் *
உரு உடையாய் உலகு ஏழும் * உண்டாக வந்து பிறந்தாய் **
திரு உடையாள் மணவாளா * திருவரங்கத்தே கிடந்தாய் *
மருவி மணம் கமழ்கின்ற * மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)

பெரியாழ்வார் திருமொழி

2

7

8

189 சீமாலிகன் அவனோடு * தோழமை கொள்ளவும் வல்லாய் *
சாமாறு அவனை நீ எண்ணிச் * சக்கரத்தால் தலை கொண்டாய் **
ஆமாறு அறியும் பிரானே * அணி அரங்கத்தே கிடந்தாய் *
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் * இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)

பெரியாழ்வார் திருமொழி

2

9

4

205 கொண்டல்வண்ணா இங்கே போதராயே* கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே*
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா இங்கே போதராயே **
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே (4)

பெரியாழ்வார் திருமொழி

2

9

11

212 ##வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் **
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி*
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே (11)

பெரியாழ்வார் திருமொழி

3

3

2

245 கன்னி நன் மா மதில் சூழ்தரு * பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம் *
மன்னிய சீர் மதுசூதனா கேசவா * பாவியேன் வாழ்வு உகந்து **
உன்னை இளங்கன்று மேய்க்கச் * சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் *
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை * என்குட்டனே முத்தம் தா (2)

பெரியாழ்வார் திருமொழி

4

8

1

402 ##மா தவத்தோன் புத்திரன் போய் * மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா * உருவுருவே கொடுத்தான் ஊர் **
தோதவத்தித் தூய் மறையோர் * துறைபடியத் துளும்பி எங்கும் *
போதில் வைத்த தேன் சொரியும் * புனல் அரங்கம் என்பதுவே (1)

பெரியாழ்வார் திருமொழி

4

8

2

403 பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த * பிள்ளைகளை நால்வரையும் *
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து * ஒருப்படுத்த உறைப்பன் ஊர் **
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் * வருவிருந்தை அளித்திருப்பார் *
சிறப்பு உடைய மறையவர் வாழ் * திருவரங்கம் என்பதுவே (2)

பெரியாழ்வார் திருமொழி

4

8

3

404 மருமகன் தன் சந்ததியை * உயிர்மீட்டு மைத்துனன்மார் *
உருமகத்தே வீழாமே * குருமுகமாய்க் காத்தான் ஊர் **
திருமுகமாய்ச் செங்கமலம் * திருநிறமாய்க் கருங்குவளை *
பொரு முகமாய் நின்று அலரும் * புனல் அரங்கம் என்பதுவே (3)

பெரியாழ்வார் திருமொழி

4

8

4

405 கூன் தொழுத்தை சிதகு உரைப்பக் * கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும் * இராச்சியமும் ஆங்கு ஒழிய **
கான் தொடுத்த நெறி போகிக் * கண்டகரைக் களைந்தான் ஊர் *
தேன்தொடுத்த மலர்ச் சோலைத் * திருவரங்கம் என்பதுவே (4)

பெரியாழ்வார் திருமொழி

4

8

5

406 பெருவரங்கள் அவைபற்றிப் * பிழக்கு உடைய இராவணனை *
உரு அரங்கப் பொருது அழித்து * இவ் உலகினைக் கண்பெறுத்தான் ஊர் **
குரவு அரும்பக் கோங்கு அலரக் * குயில் கூவும் குளிர் பொழில் சூழ் *
திருவரங்கம் என்பதுவே * என் திருமால் சேர்விடமே (5)

பெரியாழ்வார் திருமொழி

4

8

6

407 கீழ் உலகில் அசுரர்களைக் * கிழங்கிருந்து கிளராமே *
ஆழி விடுத்து அவருடைய * கரு அழித்த அழிப்பன் ஊர் **
தாழை- மடல் ஊடு உரிஞ்சித் * தவள வண்ணப் பொடி அணிந்து *
யாழின் இசை வண்டினங்கள் * ஆளம் வைக்கும் அரங்கமே (6)

பெரியாழ்வார் திருமொழி

4

8

7

408 கொழுப்பு உடைய செழுங்குருதி * கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப் *
பிழக்கு உடைய அசுரர்களைப் * பிணம் படுத்த பெருமான் ஊர் **
தழுப்பு அரிய சந்தனங்கள் * தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு *
தெழிப்பு உடைய காவிரி வந்து * அடிதொழும் சீர் அரங்கமே (7)

பெரியாழ்வார் திருமொழி

4

8

8

409 வல் எயிற்றுக் கேழலுமாய் * வாள்எயிற்றுச் சீயமுமாய் *
எல்லை இல்லாத் தரணியையும் * அவுணனையும் இடந்தான் ஊர் **
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு * எம்பெருமான் குணம் பாடி *
மல்லிகை வெண்சங்கு ஊதும் * மதில் அரங்கம் என்பதுவே (8)

பெரியாழ்வார் திருமொழி

4

8

9

410 குன்று ஆடு கொழு முகில் போல் * குவளைகள் போல் குரைகடல் போல் *
நின்று ஆடு கணமயில் போல் * நிறம் உடைய நெடுமால் ஊர் **
குன்று ஊடு பொழில் நுழைந்து * கொடி இடையார் முலை அணவி *
மன்று ஊடு தென்றல் உலாம் * மதில் அரங்கம் என்பதுவே (9)

பெரியாழ்வார் திருமொழி

4

8

10

411 ## பரு வரங்கள் அவைபற்றிப் * படை ஆலித்து எழுந்தானைச் *
செரு அரங்கப் பொருது அழித்த * திருவாளன் திருப்பதிமேல் **
திருவரங்கத் தமிழ்-மாலை * விட்டுசித்தன் விரித்தன கொண்டு *
இருவர் அங்கம் எரித்தானை * ஏத்த வல்லார் அடியோமே (10)

பெரியாழ்வார் திருமொழி

4

9

1

412 ## மரவடியைத் தம்பிக்கு * வான்பணையம் வைத்துப்போய் * வானோர் வாழச் *
செரு உடைய திசைக்கருமம் * திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில் **
திருவடிதன் திருஉருவும் * திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று *
உரு உடைய மலர்நீலம் * காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே (1)

பெரியாழ்வார் திருமொழி

4

9

2

413 தன் அடியார் திறத்தகத்துத் * தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் *
என் அடியார் அது செய்யார் * செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் **
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த *
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் * மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)

பெரியாழ்வார் திருமொழி

4

9

3

414 கருள் உடைய பொழில் மருதும் * கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் *
உருள் உடைய சகடரையும் மல்லரையும் * உடைய விட்டு ஓசை கேட்டான் **
இருள் அகற்றும் எறி கதிரோன் * மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி *
அருள் கொடுத்திட்டு அடியவரை * ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3)

பெரியாழ்வார் திருமொழி

4

9

4

415 பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பணிசெய்யத் * துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த * மணவாளர் மன்னு கோயில் **
புது நாள்மலர்க் கமலம் * எம்பெருமான் பொன் வயிற்றிற் பூவே போல்வான் *
பொது-நாயகம் பாவித்து * இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே (4)

பெரியாழ்வார் திருமொழி

4

9

5

416 ஆமையாய்க் கங்கையாய் * ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் *
நான்முகனாய் நான்மறையாய் * வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் **
சேமம் உடை நாரதனார் * சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் *
பூ மருவிப் புள் இனங்கள் * புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே (5)

பெரியாழ்வார் திருமொழி

4

9

6

417 மைத்துனன்மார் காதலியை * மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி *
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட * உயிராளன் உறையும் கோயில் **
பத்தர்களும் பகவர்களும் * பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் *
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் * திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (6)

பெரியாழ்வார் திருமொழி

4

9

7

418 குறள் பிரமசாரியாய் * மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி *
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை * கொடுத்து உகந்த எம்மான் கோயில் **
எறிப்பு உடைய மணிவரைமேல் * இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு-அணையின் வாய்ச்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் * செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7)

பெரியாழ்வார் திருமொழி

4

9

8

419 உரம் பற்றி இரணியனை * உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச் *
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க * வாய் அலறத் தெழித்தான் கோயில் **
உரம் பெற்ற மலர்க்கமலம் * உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட *
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் * தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண் அரங்கமே (8)

பெரியாழ்வார் திருமொழி

4

9

9

420 தேவு உடைய மீனமாய் ஆமையாய் * ஏனமரி குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் * கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் **
சேவலொடு பெடை அன்னம் * செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப் *
பூ-அணைமேல் துதைந்து எழு * செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே (9)

பெரியாழ்வார் திருமொழி

4

9

10

421 செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் * செருச்செயும் நாந்தம் என்னும் *
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் * விழுக்கை யாளன் **
இரவு ஆளன் பகலாளன் எனையாளன் * ஏழு உலகப் பெரும் புரவாளன் *
திருவாளன் இனிதாகத் * திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே (10)

பெரியாழ்வார் திருமொழி

4

9

11

422 ## கைந்நாகத்து இடர் கடிந்த * கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் *
தென்நாடும் வடநாடும் தொழநின்ற * திருவரங்கத் திருப்பதியின் மேல் **
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் * விரித்த தமிழ் உரைக்க வல்லார் *
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் * இணை பிரியாது இருப்பர் தாமே (11)

பெரியாழ்வார் திருமொழி

4

10

1

423 ## துப்புடையாரை அடைவது எல்லாம் * சோர்விடத்துத் துணை ஆவர் என்றே *
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் * ஆனைக்கு நீ அருள் செய்தமையால் **
எய்ப்பு என்னை வந்து நலியும்போது * அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் *
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (1)

பெரியாழ்வார் திருமொழி

4

10

2

424 சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் * சங்கொடு சக்கரம் ஏந்தினானே *
நா மடித்து என்னை அனேக தண்டம் * செய்வதா நிற்பர் நமன்தமர்கள் **
போம் இடத்து உன்திறத்து எத்தனையும் * புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை *
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2)

பெரியாழ்வார் திருமொழி

4

10

3

425 எல்லையில் வாசல் குறுகச் சென்றால் * எற்றி நமன்-தமர் பற்றும்போது *
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை * நேமியும் சங்கமும் ஏந்தினானே **
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் * சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3)

பெரியாழ்வார் திருமொழி

4

10

4

426 ஒற்றை விடையனும் நான்முகனும் * உன்னை அறியாப் பெருமையோனே! *
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி * மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ! **
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி * அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற *
அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (4)

பெரியாழ்வார் திருமொழி

4

10

5

427 பை அரவின் அணைப் பாற்கடலுள் * பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி! *
உய்ய உலகு படைக்க வேண்டி * உந்தியிற் தோற்றினாய் நான்முகனை **
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் * காலனையும் உடனே படைத்தாய் *
ஐய இனி என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (5)

பெரியாழ்வார் திருமொழி

4

10

6

428 தண்ணனவு இல்லை நமன்தமர்கள் * சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர் *
மண்ணொடு நீரும் எரியும் காலும் * மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் **
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் * எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (6)

பெரியாழ்வார் திருமொழி

4

10

7

429 செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற * தேவர்கள் நாயகனே எம்மானே *
எஞ்சலில் என்னுடை இன் அமுதே * ஏழ் உலகும் உடையாய் என் அப்பா **
வஞ்ச உருவின் நமன்தமர்கள் * வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது *
அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (7)

பெரியாழ்வார் திருமொழி

4

10

8

430 நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் * நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த
ஊனே புகே என்று மோதும்போது * அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன் **
வான் ஏய வானவர் தங்கள் ஈசா * மதுரைப் பிறந்த மா மாயனே * என்
ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8)

பெரியாழ்வார் திருமொழி

4

10

9

431 குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா * கோநிரை மேய்த்தவனே எம்மானே *
அன்று முதல் இன்று அறுதியாக * ஆதி அஞ் சோதி மறந்து அறியேன் **
நன்றும் கொடிய நமன்தமர்கள் * நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது *
அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (9)

பெரியாழ்வார் திருமொழி

4

10

10

432 ## மாயவனை மதுசூதனனை * மாதவனை மறையோர்கள் ஏத்தும் *
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை * அரங்கத்து அரவணைப் பள்ளியானை **
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் * விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் *
தூய மனத்தினர் ஆகி வல்லார் * தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே (10)

நாச்சியார் திருமொழி

1

11

1

607 ## தாம் உகக்கும் தம் கையிற் * சங்கமே போலாவோ *
யாம் உகக்கும் எம் கையில் * சங்கமும்? ஏந்திழையீர் **
தீ முகத்து நாகணைமேல்* சேரும் திருவரங்கர் *
ஆ முகத்தை நோக்காரால்* அம்மனே அம்மனே (1)

நாச்சியார் திருமொழி

1

11

2

608 எழில் உடைய அம்மனைமீர் * என் அரங்கத்து இன்னமுதர் *
குழல் அழகர் வாய் அழகர் * கண் அழகர் கொப்பூழில் *
எழு கமலப் பூ அழகர்* எம்மானார் * என்னுடைய
கழல் வளையைத்* தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)

நாச்சியார் திருமொழி

1

11

3

609 ## பொங்கு ஓதம் சூழ்ந்த * புவனியும் விண்-உலகும் *
அங்கு ஆதும் சோராமே * ஆள்கின்ற எம்பெருமான் **
செங்கோல் உடைய * திருவரங்கச் செல்வனார் *
எம் கோல்-வளையால் * இடர் தீர்வர் ஆகாதே? (3)

நாச்சியார் திருமொழி

1

11

4

610 மச்சு அணி மாட * மதில் அரங்கர் வாமனனார்*
பச்சைப் பசுந் தேவர் * தாம் பண்டு நீர் ஏற்ற **
பிச்சைக் குறையாகி* என்னுடைய பெய்வளை மேல் *
இச்சை உடையரேல்* இத் தெருவே போதாரே? (4)

நாச்சியார் திருமொழி

1

11

5

611 பொல்லாக் குறள் உருவாய்ப் * பொற் கையில் நீர் ஏற்று *
எல்லா உலகும்* அளந்து கொண்ட எம்பெருமான் **
நல்லார்கள் வாழும்* நளிர் அரங்க நாகணையான்*
இல்லாதோம் கைப்பொருளும் * எய்துவான் ஒத்து உளனே (5)

நாச்சியார் திருமொழி

1

11

6

612 கைப் பொருள்கள் முன்னமே* கைக்கொண்டார் * காவிரி நீர்
செய்ப் புரள ஓடும் * திருவரங்கச் செல்வனார் **
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் * எய்தாது * நான் மறையின்
சொற்பொருளாய் நின்றார் * என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)

நாச்சியார் திருமொழி

1

11

7

613 உண்ணாது உறங்காது * ஒலிகடலை ஊடறுத்துப் *
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம் **
திண்ணார் மதில் சூழ் * திருவரங்கச் செல்வனார் *
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே (7)

நாச்சியார் திருமொழி

1

11

8

614 ## பாசி தூர்த்தக் கிடந்த * பார்-மகட்குப் * பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் சீர் வாரா * மானம் இலாப் பன்றி ஆம் **
தேசு உடைய தேவர்* திருவரங்கச் செல்வனார் *
பேசியிருப்பனகள் * பேர்க்கவும் பேராவே (8)

நாச்சியார் திருமொழி

1

11

9

615 கண்ணாலம் கோடித்துக் * கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் *
திண் ஆர்ந்து இருந்த* சிசுபாலன் தேசு அழிந்து **
அண்ணாந்து இருக்கவே * ஆங்கு அவளைக் கைப்பிடித்த *
பெண்ணாளன் பேணும் ஊர் * பேரும் அரங்கமே (9)

நாச்சியார் திருமொழி

1

11

10

616 ##செம்மை உடைய * திருவரங்கர் தாம் பணித்த *
மெய்ம்மைப் பெரு வார்த்தை * விட்டுசித்தர் கேட்டிருப்பர் **
தம்மை உகப்பாரைத் * தாம் உகப்பர் என்னும் சொல் *
தம்மிடையே பொய்யானால்* சாதிப்பார் ஆர் இனியே? (10)

பெருமாள் திருமொழி

1

1

1

647 ## இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி* இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த *
அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் * அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் **
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி * திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் *
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு * என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1)

பெருமாள் திருமொழி

1

1

2

648 ## வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த * வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ *
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் * மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் **
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை * கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
மாயோனை மணத்தூணே பற்றி நின்று* என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (2)

பெருமாள் திருமொழி

1

1

3

649 எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்* எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு *
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும் * தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற ** செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு * அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3)

பெருமாள் திருமொழி

1

1

4

650 மாவினை வாய் பிளந்து உகந்த மாலை * வேலை வண்ணனை என் கண்ணனை * வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை * அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை ** அவ் வடமொழியை பற்று-அற்றார்கள் * பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்* கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே (4)

பெருமாள் திருமொழி

1

1

5

651 இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி * இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த *
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்* தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த **
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ * மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு* என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே (5)

பெருமாள் திருமொழி

1

1

6

652 அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு * ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும் *
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித் * திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும் **
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்* கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் *
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு * என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே (6)

பெருமாள் திருமொழி

1

1

7

653 மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி * வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து * இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண் * நிலைநின்ற தொண்டரான **
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி * அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்* நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே (7)

பெருமாள் திருமொழி

1

1

8

654 கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்* கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள் *
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும்* வென்றிக் கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப **
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த * திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி * வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே (8)

பெருமாள் திருமொழி

1

1

9

655 தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித் *திருப்புகழ்கள் பலவும் பாடி *
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் * மழை சோர நினைந்து உருகி ஏத்தி * * நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும் * திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப் * பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே! (9)

பெருமாள் திருமொழி

1

1

10

656 ## வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய * மண்-உலகில் மனிசர் உய்ய *
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர * அகம் மகிழும் தொண்டர் வாழ **
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் * அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் *
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு* யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (10)

பெருமாள் திருமொழி

1

1

11

657 ## திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்* திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் *
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக் * கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால் **
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்* கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த *
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார் * நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே (11)

பெருமாள் திருமொழி

1

2

1

658 ##தேட்டு அருந் திறல்-தேனினைத்* தென் அரங்கனைத்* திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி * மால் கொள் சிந்தையராய் **
ஆட்டம் மேவி அலந்து அழைத்து* அயர்வு- எய்தும் மெய்யடியார்கள்தம் *
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் * அது காணும் கண் பயன் ஆவதே (1)

பெருமாள் திருமொழி

1

2

2

659 தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும் * சுடர்-வாளியால் *
நீடு மா மரம் செற்றதும் * நிரை மேய்த்ததும் * இவையே நினைந்து **
ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும் * தொண்டர் அடிப்-பொடி
ஆட நாம் பெறில்* கங்கை நீர் குடைந்து ஆடும் * வேட்கை என் ஆவதே? (2)

பெருமாள் திருமொழி

1

2

3

660 ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் * முன் இராமனாய் *
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்* சொல்லிப் பாடி * * வண் பொன்னிப் பேர்-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு *அரங்கன் கோயில்-திருமுற்றம் *
சேறு செய் தொண்டர் சேவடிச் * செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே (3)

பெருமாள் திருமொழி

1

2

4

661 தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் * உடன்று ஆய்ச்சி கண்டு *
ஆர்த்த தோள் உடை எம்பிரான்* என் அரங்கனுக்கு அடியார்களாய் **
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து * மெய் தழும்பத் தொழுது
ஏத்தி * இன்பு உறும் தொண்டர் சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே (4)

பெருமாள் திருமொழி

1

2

5

662 பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்* போர்-அரவு ஈர்த்த கோன் *
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்* திண்ண மா மதில்-தென் அரங்கனாம் **
மெய் சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப் போய் *
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து * என் மனம் மெய் சிலிர்க்குமே (5)

பெருமாள் திருமொழி

1

2

6

663 ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன * வானவர் தம்பிரான் *
பாத மா மலர் சூடும் பத்தி இலாத * பாவிகள் உய்ந்திடத் **
தீதில் நன்னெறி காட்டி * எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே *
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே (6)

பெருமாள் திருமொழி

1

2

7

664 கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த * வெண்ணகைச் செய்ய வாய் *
ஆர-மார்வன் அரங்கன் என்னும் * அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச் **
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து * கசிந்து இழிந்த கண்ணீர்களால் *
வார நிற்பவர் தாளிணைக்கு * ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே (7)

பெருமாள் திருமொழி

1

2

8

665 மாலை உற்ற கடற் கிடந்தவன் * வண்டு கிண்டு நறுந்துழாய் *
மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை* மலர்க் கண்ணனை **
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்* திரிந்து அரங்கன் எம்மானுக்கே *
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு * மாலை உற்றது என் நெஞ்சமே (8)

பெருமாள் திருமொழி

1

2

9

666 மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப * ஏங்கி இளைத்து நின்று *
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து * ஆடிப் பாடி இறைஞ்சி என் **
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி யார்கள் ஆகி *அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் *
மற்றையார் முற்றும் பித்தரே (9)

பெருமாள் திருமொழி

1

2

10

667 ##அல்லி மா மலர்-மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம் *
எல்லை இல் அடிமைத் திறத்தினில் * என்றும் மேவு மனத்தனாம் **
கொல்லி-காவலன் கூடல்-நாயகன் * கோழிக்கோன் குலசேகரன் *
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர் * தொண்டர் தொண்டர்கள் ஆவரே (10)

பெருமாள் திருமொழி

1

3

1

668 ##மெய் இல் வாழ்க்கையை * மெய் எனக் கொள்ளும் * இவ்
வையம்தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
ஐயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
மையல் கொண்டொழிந்தேன் * என்தன் மாலுக்கே (1)

பெருமாள் திருமொழி

1

3

2

669 நூலின் நேர்-இடையார் * திறத்தே நிற்கும் *
ஞாலம் தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
ஆலியா அழையா * அரங்கா என்று *
மால் எழுந்தொழிந்தேன் * என்தன் மாலுக்கே (2)

பெருமாள் திருமொழி

1

3

3

670 மாரனார் * வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும் *
பாரினாரொடும் * கூடுவது இல்லை யான் **
ஆர-மார்வன் * அரங்கன் அனந்தன் * நல்
நாரணன் * நரகாந்தகன் பித்தனே (3)

பெருமாள் திருமொழி

1

3

4

671 உண்டியே உடையே * உகந்து ஓடும் * இம்
மண்டலத்தொடும் * கூடுவது இல்லை யான் **
அண்டவாணன் * அரங்கன் வன் பேய்-முலை *
உண்ட வாயன்தன் * உன்மத்தன் காண்மினே (4)

பெருமாள் திருமொழி

1

3

5

672 தீதில் நன்னெறி நிற்க *அல்லாது செய் *
நீதியாரொடும் * கூடுவது இல்லை யான் **
ஆதி ஆயன் * அரங்கன் அந் தாமரைப் *
பேதை மா மணவாளன்* தன் பித்தனே (5)

பெருமாள் திருமொழி

1

3

6

673 எம் பரத்தர் * அல்லாரொடும் கூடலன் *
உம்பர் வாழ்வை * ஒன்றாகக் கருதலன் **
தம்பிரான் அமரர்க்கு * அரங்க நகர் *
எம்பிரானுக்கு * எழுமையும் பித்தனே (6)

பெருமாள் திருமொழி

1

3

7

674 எத் திறத்திலும் * யாரொடும் கூடும் * அச்
சித்தந்தன்னைத் * தவிர்த்தனன் செங்கண் மால் **
அத்தனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
பித்தனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (7)

பெருமாள் திருமொழி

1

3

8

675 பேயரே * எனக்கு யாவரும் * யானும் ஓர்
பேயனே * எவர்க்கும் இது பேசி என் **
ஆயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
பேயனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (8)

பெருமாள் திருமொழி

1

3

9

676 ##அங்கை-ஆழி * அரங்கன் அடியிணை *
தங்கு சிந்தைத் * தனிப் பெரும் பித்தனாய்க் **
கொங்கர்கோன் * குலசேகரன் சொன்ன சொல் *
இங்கு வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (9)

பெருமாள் திருமொழி

1

8

10

728 ## தேவரையும் அசுரரையும் * திசைகளையும் படைத்தவனே *
யாவரும் வந்து அடி வணங்க * அரங்கநகர்த் துயின்றவனே **
காவிரி நல் நதி பாயும் * கணபுரத்து என் கருமணியே *
ஏ வரி வெஞ்சிலை வலவா * இராகவனே தாலேலோ (10)

திருச்சந்த விருத்தம்

1

1

21

772 அரங்கனே! தரங்க நீர்* கலங்க அன்று குன்று சூழ்*
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய் **
நெருங்க நீ கடைந்தபோது* நின்ற சூரர் என் செய்தார்?*
குரங்கை ஆள் உகந்த எந்தை!* கூறு தேற வேறு இதே (21)

திருச்சந்த விருத்தம்

1

1

49

800 கொண்டை கொண்ட கோதை மீது * தேன் உலாவு கூனி கூன் *
உண்டை கொண்டு அரங்க ஓட்டி * உள் மகிழ்ந்த நாதன் ஊர் **
நண்டை உண்டு நாரை பேர * வாளை பாய நீலமே *
அண்டை கொண்டு கெண்டை மேயும் * அந் தண் நீர் அரங்கமே (49)

திருச்சந்த விருத்தம்

1

1

50

801 வெண் திரைக் கருங் கடல் * சிவந்து வேவ முன் ஒர் நாள் *
திண் திறற் சிலைக்கை வாளி * விட்ட வீரர் சேரும் ஊர் **
எண் திசைக் கணங்களும் * இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் *
வண்டு இரைத்த சோலை வேலி * மன்னு சீர் அரங்கமே (50)

திருச்சந்த விருத்தம்

1

1

51

802 சரங்களைத் துரந்து * வில் வளைத்து இலங்கை மன்னவன் *
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த * செல்வர் மன்னு பொன்-இடம் **
பரந்து பொன் நிரந்து நுந்தி * வந்து அலைக்கும் வார் புனல் *
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த * கோயிலே (51)

திருச்சந்த விருத்தம்

1

1

52

803 பொற்றை உற்ற முற்றல் யானை * போர் எதிர்ந்து வந்ததைப் *
பற்றி உற்று மற்று அதன் * மருப்பு ஒசித்த பாகன் ஊர் **
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் * மூன்று தண்டர் ஒன்றினர் *
அற்ற பற்றர் சுற்றி வாழும் * அந்தண் நீர் அரங்கமே (52)

திருச்சந்த விருத்தம்

1

1

53

804 மோடியோடு இலச்சையாய * சாபம் எய்தி முக்கணான் *
கூடு சேனை மக்களோடு * கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட ** வாணன் ஆயிரம் * கரங் கழித்த ஆதி மால் *
பீடு கோயில் கூடு நீர் * அரங்கம் என்ற பேரதே (53)

திருச்சந்த விருத்தம்

1

1

54

805 இலைத் தலைச் சரம் துரந்து * இலங்கை கட்டழித்தவன் *
மலைத் தலைப் பிறந்து இழிந்து * வந்து நுந்து சந்தனம் **
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த * குங்குமக் குழம்பினோடு *
அலைத்து ஒழுகு காவிரி * அரங்கம் மேய அண்ணலே (54)

திருச்சந்த விருத்தம்

1

1

55

806 மன்னு மா மலர்க் கிழத்தி * வைய மங்கை மைந்தனாய் *
பின்னும் ஆயர் பின்னை தோள் * மணம் புணர்ந்து அது அன்றியும் **
உன்ன பாதம் என்ன சிந்தை * மன்ன வைத்து நல்கினாய் *
பொன்னி சூழ் அரங்கம் மேய * புண்டரீகன் அல்லையே? (55)

திருச்சந்த விருத்தம்

1

1

93

844 சுரும்பு அரங்கு தண் துழாய் * துதைந்து அலர்ந்த பாதமே *
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு * இரங்கு அரங்கவாணனே **
கரும்பு இருந்த கட்டியே * கடல் கிடந்த கண்ணனே *
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த * வில் இராமனே (93)

திருச்சந்த விருத்தம்

1

1

119

870 ## பொன்னி சூழ் அரங்கம் மேய * பூவை-வண்ண மாய கேள் *
என்னது ஆவி என்னும் * வல்வினையினுட் கொழுந்து எழுந்து **
உன்ன பாதம் என்ன நின்ற * ஒண்சுடர்க் கொழுமலர் *
மன்ன வந்து பூண்டு * வாட்டம் இன்றி எங்கும் நின்றதே (119)

திருமாலை

1

1

1

872 ##காவலிற் புலனை வைத்து* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து*
நாவலிட்டு உழிதர்கின்றோம்* நமன்-தமர் தலைகள் மீதே **
மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற*
ஆவலிப்பு உடைமை கண்டாய்* அரங்க மா நகருளானே (1)

திருமாலை

1

1

2

873 ## பச்சை மா மலை போல் மேனி* பவளவாய் கமலச் செங்கண் *
அச்சுதா அமரர் ஏறே* ஆயர் தம் கொழுந்தே என்னும் **
இச் சுவை தவிர யான் போய்* இந்திர-லோகம் ஆளும்*
அச் சுவை பெறினும் வேண்டேன்* அரங்க மா நகருளானே (2)

திருமாலை

1

1

3

874 வேத நூற் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவரேலும்*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதிற் பதினையாண்டு **
பேதை பாலகன் அது ஆகும்* பிணி பசி மூப்புத் துன்பம் *
ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்க மா நகருளானே (3)

திருமாலை

1

1

4

875 மொய்த்த வல்வினையுள் நின்று* மூன்று எழுத்து உடைய பேரால்*
கத்திரபந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான் **
இத்தனை அடியர் ஆனார்க்கு* இரங்கும் நம் அரங்கன் ஆய *
பித்தனைப் பெற்றும் அந்தோ* பிறவியுள் பிணங்குமாறே (4)

திருமாலை

1

1

5

876 பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியது ஓர் இடும்பை பூண்டு*
உண்டு இராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து **
தண் துழாய்-மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடி ஆடி*
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்* தொழும்பர்சோறு உகக்குமாறே (5)

திருமாலை

1

1

6

877 மறம் சுவர் மதில் எடுத்து * மறுமைக்கே வெறுமை பூண்டு *
புறம் சுவர் ஓட்டை மாடம் * புரளும் போது அறிய மாட்டீர் **
அறம் சுவர் ஆகி நின்ற * அரங்கனார்க்கு ஆட் செய்யாதே *
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து * புள் கௌவக் கிடக்கின்றீரே (6)

திருமாலை

1

1

7

878 புலை-அறம் ஆகி நின்ற * புத்தொடு சமணம் எல்லாம் *
கலை அறக் கற்ற மாந்தர் * காண்பரோ? கேட்பரோ தாம்? **
தலை அறுப்பு உண்டும் சாவேன் * சத்தியம் காண்மின் ஐயா *
சிலையினால் இலங்கை செற்ற * தேவனே தேவன் ஆவான் (7)

திருமாலை

1

1

8

879 வெறுப்பொடு சமணர் முண்டர் * விதி இல் சாக்கியர்கள் * நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில் * போவதே நோயது ஆகி **
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் * கூடுமேல் தலையை * ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் * அரங்க மா நகருளானே (8)

திருமாலை

1

1

9

880 மற்றும் ஓர் தெய்வம் உண்டே? * மதி இலா மானிடங்காள் *
உற்றபோது அன்றி நீங்கள் * ஒருவன் என்று உணர மாட்டீர் **
அற்றம் மேல் ஒன்று அறியீர் * அவன் அல்லால் தெய்வம் இல்லை *
கற்றினம் மேய்த்த எந்தை * கழலிணை பணிமின் நீரே (9)

திருமாலை

1

1

10

881 நாட்டினான் தெய்வம் எங்கும் * நல்லது ஓர் அருள் தன்னாலே *
காட்டினான் திருவரங்கம் * உய்பவர்க்கு உய்யும் வண்ணம் **
கேட்டிரே நம்பிமீர்காள் * கெருடவா கனனும் நிற்கச் *
சேட்டை தன் மடியகத்துச் * செல்வம் பார்த்து இருக்கின்றீரே (10)

திருமாலை

1

1

11

882 ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் * அடைத்து உலகங்கள் உய்யச் *
செருவிலே அரக்கர்கோனைச் * செற்ற நம் சேவகனார் **
மருவிய பெரிய கோயில் * மதில்-திருவரங்கம் என்னா *
கருவிலே திரு இலாதீர் * காலத்தைக் கழிக்கின்றீரே (11)

திருமாலை

1

1

12

883 நமனும் முற்கலனும் பேச * நரகில் நின்றார்கள் கேட்க *
நரகமே சுவர்க்கம் ஆகும் * நாமங்கள் உடையன் நம்பி **
அவனது ஊர் அரங்கம் என்னாது * அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் *
கவலையுள் படுகின்றார் என்று * அதனுக்கே கவல்கின்றேனே (12)

திருமாலை

1

1

13

884 எறியும் நீர் வெறிகொள் வேலை * மாநிலத்து உயிர்கள் எல்லாம் *
வெறிகொள் பூந்துளவ மாலை * விண்ணவர்கோனை ஏத்த **
அறிவு இலா மனிசர் எல்லாம் * அரங்கம் என்று அழைப்பராகில் *
பொறியில் வாழ் நரகம் எல்லாம் * புல் எழுந்து ஒழியும் அன்றே (13)

திருமாலை

1

1

14

885 ## வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீது அணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை **
அண்டர்கோன் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை விலக்கி * நாய்க்கு இடுமின் நீரே (14)

திருமாலை

1

1

15

886 மெய்யர்க்கே மெய்யன் ஆகும் * விதி இலா என்னைப் போலப் *
பொய்யர்க்கே பொய்யன் ஆகும் * புட்கொடி உடைய கோமான் **
உய்யப்போம் உணர்வினார்கட்கு * ஒருவன் என்று உணர்ந்த பின்னை *
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் * அழகன் ஊர் அரங்கம் அன்றே (15)

திருமாலை

1

1

16

887 சூதனாய்க் கள்வனாகித் * தூர்த்தரோடு இசைந்த காலம் *
மாதரார் கயற்கண் என்னும் * வலையுள் பட்டு அழுந்துவேனைப் **
போதரே என்று சொல்லிப் * புந்தியுள் புகுந்து * தன்பால்
ஆதரம் பெருக வைத்த * அழகன் ஊர் அரங்கம் அன்றே (16)

திருமாலை

1

1

17

888 விரும்பி நின்று ஏத்த மாட்டேன் * விதி இலேன் மதி ஒன்று இல்லை *
இரும்புபோல் வலிய நெஞ்சம் * இறை-இறை உருகும் வண்ணம் **
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டு கொண்டு * என் கண்ணினை களிக்குமாறே (17)

திருமாலை

1

1

18

889 இனி திரைத் திவலை மோத * எறியும் தண் பரவை மீதே *
தனி கிடந்து அரசு செய்யும் * தாமரைக்கண்ணன் எம்மான் **
கனி இருந்தனைய செவ்வாய்க் * கண்ணனைக் கண்ட கண்கள் *
பனி-அரும்பு உதிருமாலோ * என் செய்கேன் பாவியேனே? (18)

திருமாலை

1

1

19

890 ## குடதிசை முடியை வைத்துக் * குணதிசை பாதம் நீட்டி *
வடதிசை பின்பு காட்டித் * தென்திசை இலங்கை நோக்கிக் **
கடல்-நிறக் கடவுள் எந்தை * அரவணைத் துயிலுமா கண்டு *
உடல் எனக்கு உருகுமாலோ * என் செய்கேன் உலகத்தீரே? (19)

திருமாலை

1

1

20

891 பாயும் நீர் அரங்கந் தன்னுள் * பாம்பு-அணைப் பள்ளிகொண்ட *
மாயனார் திரு நன் மார்வும் * மரகத-உருவும் தோளும் **
தூய தாமரைக் கண்களும் * துவர்-இதழ்ப் பவள-வாயும் *
ஆய சீர் முடியும் தேசும் * அடியரோர்க்கு அகலல் ஆமே? (20)

திருமாலை

1

1

21

892 பணிவினால் மனமது ஒன்றிப் * பவள-வாய் அரங்கனார்க்குத் *
துணிவினால் வாழ மாட்டாத் * தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் **
அணியின் ஆர் செம்பொன் ஆய * அருவரை அனைய கோயில் *
மணி அனார் கிடந்தவாற்றை * மனத்தினால் நினைக்கல் ஆமே? (21)

திருமாலை

1

1

22

893 பேசிற்றே பேசல் அல்லால்* பெருமை ஒன்று உணரல் ஆகாது *
ஆசற்றார் தங்கட்கு அல்லால் * அறியல் ஆவானும் அல்லன் **
மாசற்றார் மனத்துளானை * வணங்கி நாம் இருப்பது அல்லால் *
பேசத்தான் ஆவது உண்டோ? * பேதை நெஞ்சே நீ சொல்லாய் (22)

திருமாலை

1

1

23

894 கங்கையிற் புனிதம் ஆய * காவிரி நடுவுபாட்டுப் *
பொங்குநீர் பரந்து பாயும் * பூம்பொழில் அரங்கந் தன்னுள் **
எங்கள் மால் இறைவன் ஈசன் * கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் *
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? * ஏழையேன் ஏழையேனே (23)

திருமாலை

1

1

24

895 வெள்ள-நீர் பரந்து பாயும் * விரி பொழில் அரங்கந் தன்னுள் *
கள்வனார் கிடந்தவாறும் * கமல நன் முகமும் கண்டும் **
உள்ளமே வலியை போலும் * ஒருவன் என்று உணர மாட்டாய் *
கள்ளமே காதல் செய்து * உன் கள்ளத்தே கழிக்கின்றாயே (24)

திருமாலை

1

1

25

896 குளித்து மூன்று அனலை ஓம்பும் * குறிகொள் அந்தணமை தன்னை *
ஒளித்திட்டேன் என்கண் இல்லை * நின்கணும் பத்தன் அல்லேன் **
களிப்பது என் கொண்டு? நம்பீ * கடல்வண்ணா கதறுகின்றேன் *
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் * அரங்க மா நகருளானே (25)

திருமாலை

1

1

26

897 போதெல்லாம் போது கொண்டு * உன் பொன்னடி புனைய மாட்டேன் *
தீதிலா மொழிகள் கொண்டு * உன் திருக்குணம் செப்ப மாட்டேன் **
காதலால் நெஞ்சம் அன்பு * கலந்திலேன் அது தன்னாலே *
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே * என் செய்வான் தோன்றினேனே? (26)

திருமாலை

1

1

27

898 குரங்குகள் மலையை நூக்கக் * குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித் *
தரங்க நீர் அடைக்கல் உற்ற * சலம் இலா அணிலும் போலேன் **
மரங்கள் போல் வலிய நெஞ்ச * வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே * அளியத்தேன் அயர்க்கின்றேனே (27)

திருமாலை

1

1

28

899 உம்பரால் அறியல் ஆகா * ஒளியுளார் ஆனைக்கு ஆகிச் *
செம் புலால் உண்டு வாழும் * முதலைமேல் சீறி வந்தார் **
நம் பரம் ஆயது உண்டே? * நாய்களோம் சிறுமை ஓரா *
எம்பிராற்கு ஆட் செய்யாதே * என் செய்வான் தோன்றினேனே (28)

திருமாலை

1

1

29

900 ஊர் இலேன் காணி இல்லை * உறவு மற்று ஒருவர் இல்லை *
பாரில் நின் பாத மூலம் * பற்றிலேன் பரம மூர்த்தி **
காரொளி வண்ணனே என் * கண்ணனே கதறுகின்றேன் *
ஆர் உளர் களைகண்? அம்மா * அரங்க மா நகருளானே (29)

திருமாலை

1

1

30

901 மனத்தில் ஓர் தூய்மை இல்லை * வாயில் ஓர் இன்சொல் இல்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித் * தீவிளி விளிவன் வாளா **
புனத்துழாய் மாலையானே * பொன்னி சூழ் திருவரங்கா *
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? * என்னை ஆளுடைய கோவே (30)

திருமாலை

1

1

31

902 தவத்துளார் தம்மில் அல்லேன் * தனம் படைத்தாரில் அல்லேன் *
உவர்த்த நீர் போல * என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் **
துவர்த்த செவ்வாயினார்க்கே * துவக்கு அறத் துரிசன் ஆனேன் *
அவத்தமே பிறவி தந்தாய் * அரங்க மா நகருளானே (31)

திருமாலை

1

1

32

903 ஆர்த்து வண்டு அலம்பும் சோலை * அணி திரு அரங்கந் தன்னுள் *
கார்த் திரள் அனைய மேனிக் * கண்ணனே உன்னைக் காணும் **
மார்க்கம் ஒன்று அறியமாட்டா * மனிசரில் துரிசனாய *
மூர்க்கனேன் வந்து நின்றேன் * மூர்க்கனேன் மூர்க்கனேனே (32)

திருமாலை

1

1

33

904 மெய் எல்லாம் போக விட்டு * விரிகுழலாரிற் பட்டுப் *
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட * போழ்க்கனேன் வந்து நின்றேன் **
ஐயனே அரங்கனே * உன் அருள் என்னும் ஆசை தன்னால் *
பொய்யனேன் வந்து நின்றேன் * பொய்யனேன் பொய்யனேனே (33)

திருமாலை

1

1

34

905 உள்ளத்தே உறையும் மாலை * உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக் *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் * தொண்டுக்கே கோலம் பூண்டு **
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் * உடன் இருந்து அறிதி என்று *
வெள்கிப்போய் என்னுள்ளே நான் * விலவு அறச் சிரித்திட்டேனே (34)

திருமாலை

1

1

35

906 தாவி அன்று உலகம் எல்லாம் *தலைவிளாக்கொண்ட எந்தாய் *
சேவியேன் உன்னை அல்லால் * சிக்கெனச் செங்கண் மாலே **
ஆவியே அமுதே * என்தன் ஆருயிர் அனைய எந்தாய் *
பாவியேன் உன்னை அல்லால் * பாவியேன் பாவியேனே (35)

திருமாலை

1

1

36

907 மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் * மைந்தனே மதுர ஆறே *
உழைக் கன்றே போல நோக்கம் * உடையவர் வலையுள் பட்டு **
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது * ஒழிவதே உன்னை யன்றே *
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி * அரங்கமா நகருளானே (36)

திருமாலை

1

1

37

908 தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்* திருவரங்கத்துள் ஓங்கும் *
ஒளியுளார் தாமே யன்றே * தந்தையும் தாயும் ஆவார்? **
எளியது ஓர் அருளும் அன்றே * என் திறத்து? எம்பிரானார் *
அளியன் நம் பையல் என்னார் * அம்மவோ கொடியவாறே (37)

திருமாலை

1

1

38

909 ## மேம் பொருள் போக விட்டு * மெய்ம்மையை மிக உணர்ந்து *
ஆம் பரிசு அறிந்துகொண்டு * ஐம்புலன் அகத்து அடக்கிக் **
காம்பு அறத் தலை சிரைத்து * உன் கடைத்தலை இருந்து வாழும் *
சோம்பரை உகத்தி போலும் * சூழ் புனல் அரங்கத்தானே (38)

திருமாலை

1

1

39

910 அடிமையிற் குடிமை இல்லா * அயல் சதுப்பேதிமாரிற் *
குடிமையிற் கடைமை பட்ட * குக்கரில் பிறப்பரேலும் **
முடியினில் துளபம் வைத்தாய் * மொய் கழற்கு அன்பு செய்யும் *
அடியரை உகத்தி போலும் * அரங்க மா நகருளானே 39

திருமாலை

1

1

40

911 திருமறுமார்வ நின்னைச் * சிந்தையுள் திகழ வைத்து *
மருவிய மனத்தர் ஆகில் * மா நிலத்து உயிர்கள் எல்லாம் **
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு * ஈட்டிய வினையரேலும் *
அருவினைப் பயன துய்யார் * அரங்க மா நகருளானே (40)

திருமாலை

1

1

41

912 வானுளார் அறியல் ஆகா * வானவா என்பர் ஆகில் *
தேனுலாம் துளப மாலைச் * சென்னியாய் என்பர் ஆகில் **
ஊனம் ஆயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும் *
போனகம் செய்த சேடம் * தருவரேல் புனிதம் அன்றே (41)

திருமாலை

1

1

42

913 பழுது இலா ஒழுகல்-ஆற்றுப் * பல சதுப்பேதிமார்கள் *
இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்கள் ஆகில் **
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின் * என்று நின்னோடும் ஒக்க *
வழிபட அருளினாய் போல் * மதில்-திருவரங்கத்தானே (42)

திருமாலை

1

1

43

914 அமர ஓர் அங்கம் ஆறும் * வேதம் ஓர் நான்கும் ஓதித் *
தமர்களிற் தலைவராய * சாதி-அந்தணர்களேலும் **
நுமர்களைப் பழிப்பர் ஆகில் * நொடிப்பது ஓர் அளவில் * ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்க மா நகருளானே (43)

திருமாலை

1

1

44

915 ## பெண் உலாம் சடையினானும் * பிரமனும் உன்னைக் காண்பான் *
எண் இலா ஊழி ஊழி * தவம் செய்தார் வெள்கி நிற்ப **
விண் உளார் வியப்ப வந்து * ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா * உன்னை என்னோ? * களைகணாக் கருதுமாறே (44)

திருமாலை

1

1

45

916 ## வள எழும் தவள மாட * மதுரை மா நகரந் தன்னுள் *
கவள மால் யானை கொன்ற * கண்ணனை அரங்க-மாலைத் **
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் * தொண்டரடிப் பொடி சொல் *
இளைய புன் கவிதையேலும் * எம்பிராற்கு இனியவாறே (45)

திருப்பள்ளியெழுச்சி

1

1

1

917 ## கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்*
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் *
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி **
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் *
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)

திருப்பள்ளியெழுச்சி

1

2

2

918 கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் *
கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ*
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்*
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி **
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்*
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி*
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)

திருப்பள்ளியெழுச்சி

1

3

3

919 சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்*
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி*
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ*
பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின் **
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற*
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ*
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3)

திருப்பள்ளியெழுச்சி

1

4

4

920 மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்*
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்*
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் *
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை **
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே *
மா முனி வேள்வியைக் காத்து*அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (4)

திருப்பள்ளியெழுச்சி

1

5

5

921 .புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்*
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி*
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்*
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த **
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்*
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில் *
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)

திருப்பள்ளியெழுச்சி

1

6

6

922 இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ*
இறையவர் பதினொரு விடையரும் இவரோ*
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ*
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி **
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்*
குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் *
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6)

திருப்பள்ளியெழுச்சி

1

7

7

923 .அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ*
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ *
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ *
எம்பெருமான் உன கோயிலின் வாசல் **
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க *
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (7)

திருப்பள்ளியெழுச்சி

1

8

8

924 வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க *
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா *
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு*
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் **
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ *
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி *
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய் *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)

திருப்பள்ளியெழுச்சி

1

9

9

925 ## ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி *
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி *
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் *
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் **
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள *
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)

திருப்பள்ளியெழுச்சி

1

10

10

926 ## கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ*
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ*
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்*
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா **
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து *
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை* அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய்* பள்ளி எழுந்தருளாயே (10)

அமலனாதிபிரான்

1

1

1

927 ## . அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன்* விண்ணவர்கோன்* விரையார் பொழில் வேங்கடவன் * *
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள் மதில் அரங்கத்து அம்மான்* திருக்
கமல பாதம் வந்து * என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே (1)

அமலனாதிபிரான்

1

2

2

928 உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை* *
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்* கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல்* சென்றது ஆம் என சிந்தனையே (2)

அமலனாதிபிரான்

1

3

3

929 ## . மந்தி பாய்* வட வேங்கட மா மலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவினணையான் * *
அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்*
உந்தி மேலது அன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே (3)

அமலனாதிபிரான்

1

4

4

930 சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்* தலை பத்து
உதிர ஓட்டி* ஓர் வெங்கணை உய்த்தவன்* ஓதவண்ணன் * *
மதுர மா வண்டு பாட* மா மயில் ஆடு அரங்கத்து அம்மான்* திரு வயிற்று
உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)

அமலனாதிபிரான்

1

5

5

931 பாரமமாய* பழவினை பற்றறுத்து * என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான்* வைத்தது அன்றி என் உள் புகுந்தான்* *
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்ப த ன்றோ* அடியேனை ஆட்கொண்டதே (5)

அமலனாதிபிரான்

1

6

6

932 துண்ட வெண் பிறையன்* துயர் தீர்த்தவன் *அஞ்சிறைய-
வண்டு வாழ் பொழில் சூழ்* அரங்க நகர் மேய அப்பன்* *
அண்டரண்ட பகிரண்டத்து* ஒரு மா நிலம் எழு மால் வரை* முற்றும்
உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய் யக் கொண்டதே (6)

அமலனாதிபிரான்

1

7

7

933 கையின் ஆர்* சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல்
மெய்யனார்* துளப விரையார் கமழ்* நீள் முடி எம் * *
ஐயனார்* அணி அரங்கனார் * அர வின ணைமிசை மேய மாயனார்*
செய்ய வாய் ஐயோ* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே (7)

அமலனாதிபிரான்

1

8

8

934 பரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்துக்* *
கரிய ஆகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப்
பெரிய ஆய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே (8)

அமலனாதிபிரான்

1

9

9

935 ## . ஆல மா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய் *
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின ணையான்* *
கோல மா மணி-ஆரமும்* முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் *
நீல மேனி ஐயோ* நிறைகொண்டது என் நெஞ்சினையே (9)

அமலனாதிபிரான்

1

10

10

936 ## . கொண்டல்வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன்* என் உள்ளம் கவர்ந்தானை * *
அண்டர்கோன் அணி-அரங்கன்* என் அமுதினைக்
கண்ட கண்கள்* மற்றொன்றினைக் காணாவே (10)

பெரிய திருமொழி

1

8

2

1019 ## பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் * இரங்க வன் பேய் முலை *
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை * பிரான்-அவன் பெருகும் இடம் **
வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் என்று எண்ணி *
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே-2

பெரிய திருமொழி

3

7

6

1213 என் துணை என்று எடுத்தேற்கு * இறையேனும் இரங்கிற்றிலள் *
தன் துணை ஆய என்-தன் * தனிமைக்கும் இரங்கிற்றிலள் **
வன் துணை வானவர்க்கு ஆய் * வரம் செற்று அரங்கத்து உறையும் *
இன் துணைவனொடும் போய் * எழில் ஆலி புகுவர்கொலோ?-6

பெரிய திருமொழி

5

4

1

1378 ## உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன்
எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் **-
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே-1

பெரிய திருமொழி

5

4

2

1379 வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பை கொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால் **-
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே-2

பெரிய திருமொழி

5

4

3

1380 பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர
கொண்ட* ஆழித் தடக் கைக்* குறளன் இடம் என்பரால் **-
வண்டு பாடும் மது வார்* புனல் வந்து இழி காவிரி*
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே-3

பெரிய திருமொழி

5

4

4

1381 விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட*
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு* இடம் என்பரால் **-
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே-4

பெரிய திருமொழி

5

4

5

1382 வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக*
அம்பு-தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால் **-
உம்பர்-கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* நல்
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே-5

பெரிய திருமொழி

5

4

6

1383 கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழ் இடம் என்பரால் **-
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே-6

பெரிய திருமொழி

5

4

7

1384 கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால் **-
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே-7

பெரிய திருமொழி

5

4

8

1385 ஏனம் மீன் ஆமையோடு * அரியும் சிறு குறளும் ஆய் *
தானும் ஆய * தரணித் தலைவன் இடம் என்பரால் **
வானும் மண்ணும் நிறையப் * புகுந்து ஈண்டி வணங்கும் * நல்தேனும்
பாலும் கலந்த * அன்னவர் சேர் தென் அரங்கமே-8

பெரிய திருமொழி

5

4

9

1386 சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* இம்
மாயை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால் **-
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிரி*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே-9

பெரிய திருமொழி

5

4

10

1387 ## அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல் **நல்
இசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர்-தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே-10

பெரிய திருமொழி

5

5

1

1388 ## வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே
வேங்கடமே என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண்
துயில் மறந்தாள் **-வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர்-தம் உயிராளன்*
ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன்* என் மகளைச் செய்தனகள்*
எங்ஙனம் நான் சிந்திக்கேனே?-1

பெரிய திருமொழி

5

5

2

1389 கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும்
கை ஆளா-என் செய்கேன் நான்?*
விலை ஆளா அடியேனை* வேண்டுதியோ?
வேண்டாயோ? என்னும் **-மெய்ய
மலையாளன் வானவர்-தம் தலையாளன்*
மராமரம் ஏழ் எய்த வென்றிச்
சிலையாளன்* என் மகளைச் செய்தனகள்*
எங்ஙனம் நான் சிந்திக்கேனே?-2

பெரிய திருமொழி

5

5

3

1390 மான் ஆய மென் நோக்கி* வாள் நெடுங் கண்
நீர் மல்கும் வளையும் சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*
திறம் பேசி உறங்காள் காண்மின் **-
கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு
நெய் பருக* நந்தன் பெற்ற
ஆன்-ஆயன்* என் மகளைச் செய்தனகள்*
அம்மனைமீர் அறிகிலேனே-3

பெரிய திருமொழி

5

5

4

1391 தாய் வாயில் சொல் கேளாள்* தன் ஆயத்
தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே *ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும் **-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
பெரு வயிற்றன்* பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்*
மங்கைமீர் மதிக்கிலேனே-4

பெரிய திருமொழி

5

5

5

1392 பூண் முலைமேல் சாந்து அணியாள்* பொரு கயல் கண்
மை எழுதாள் பூவை பேணாள்* ஏண்
அறியாள் எத்தனையும் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும் **-
நாள் மலராள் நாயகன்* ஆய் நாம் அறிய
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*
அம்மனைமீர்-5

பெரிய திருமொழி

5

5

6

1393 தாது ஆடு வன மாலை* தாரானோ?
என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான்
திருவரங்கம் என்னும் **-பூமேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*
மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற
தூதாளன்* என் மகளைச் செய்தனகள்*
எங்ஙனம் நான் சொல்லுகேனே?-6

பெரிய திருமொழி

5

5

7

1394 வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு
ஆயினவாறு எண்ணாள்* எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள்* இப்
பெண் பெற்றேன் என் செய்கேன் நான்? **
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்*
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன்* என் மகளைச் செய்தனகள்*
எங்ஙனம் நான் செப்புகேனே?-7

பெரிய திருமொழி

5

5

8

1395 உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது
பலர் ஏசும் அலர் ஆயிற்றால்*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே
மாதவனே என்கின்றாளால் **-
பிறவாத பேராளன் பெண் ஆளன்
மண் ஆளன்* விண்ணோர்-தங்கள்
அறவாளன்* என் மகளைச் செய்தனகள்*
அம்மனைமீர் அறிகிலேனே-8

பெரிய திருமொழி

5

5

9

1396 பந்தோடு கழல் மருவாள்* பைங் கிளியும்
பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்?* வாரானோ?
என்று என்றே வளையும் சோரும் **-
சந்தோகன் பௌழியன்* ஐந் தழல் ஓம்பு
தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*
அம்மனைமீர் அறிகிலேனே-9

பெரிய திருமொழி

5

5

10

1397 ## சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து
அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*
தாய் மொழிந்த-அதனை ** நேரார்
கால வேல் பரகாலன்* கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*
பொன்-உலகில் வாழ்வர்-தாமே-10

பெரிய திருமொழி

5

6

1

1398 ## கைம் மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை*
மைம் மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை **
எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த
அம்மானை* யான் கண்டது*-அணி நீர்த் தென் அரங்கத்தே-1

பெரிய திருமொழி

5

6

2

1399 ## பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால்
ஊரானை* கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது-தென் அரங்கத்தே-2

பெரிய திருமொழி

5

6

3

1400 ஏன் ஆகி உலகு இடந்து * அன்று இரு நிலனும் பெரு விசும்பும் * தான்
ஆய பெருமானை * தன் அடியார் மனத்து என்றும் **
தேன் ஆகி அமுது ஆகித் * திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் *
ஆன்-ஆயன் ஆனானைக் * கண்டது-தென் அரங்கத்தே-3

பெரிய திருமொழி

5

6

4

1401 வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை ** பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள்
அளந்தவனை* யான் கண்டது*-அணி நீர்த் தென் அரங்கத்தே-4

பெரிய திருமொழி

5

6

5

1402 நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* அன்று அரக்கன்-
ஊர் அழலால் உண்டானை* கண்டார் பின் காணாமே **
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது-தென் அரங்கத்தே-5

பெரிய திருமொழி

5

6

6

1403 தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை தரியாது*
கஞ்சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை **
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது-தென் அரங்கத்தே-6

பெரிய திருமொழி

5

6

7

1404 ## சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது
வந்து எனது மனத்து இருந்த* வடமலையை ** வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை* யான் கண்டது*-அணி நீர்த் தென் அரங்கத்தே-7

பெரிய திருமொழி

5

6

8

1405 துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை ** தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது-தென் அரங்கத்தே-8

பெரிய திருமொழி

5

6

9

1406 பொய் வண்ணம் மனத்து அகற்றி* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை **
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரகதத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது-தென் அரங்கத்தே-9

பெரிய திருமொழி

5

6

10

1407 ## ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர் **
நா மருவு தமிழ்-மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே-10

பெரிய திருமொழி

5

7

1

1408 ## பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்*
பதங்களும் பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*
பெருகிய புனலொடு நிலனும் **
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*
ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-1

பெரிய திருமொழி

5

7

2

1409 இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் *
எண் இல் பல் குணங்களே இயற்ற *
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் * சுற்றி நின்று அகலாப்
பந்தமும் ** பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-2

பெரிய திருமொழி

5

7

3

1410 மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்*
வானமும் தானவர் உலகும்*
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*
தொல்லை நான்மறைகளும் மறைய **
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*
பிறங்கு இருள் நிறம் கெட *ஒருநாள்
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*
-அரங்க மா நகர் அமர்ந்தானே-3

பெரிய திருமொழி

5

7

4

1411 மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக*
மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*
படு திரை விசும்பிடைப் படர **
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்*
தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-4

பெரிய திருமொழி

5

7

5

1412 எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?*
-இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*
பொழிதரும் அருவி ஒத்து இழிய **
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*
விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-5

பெரிய திருமொழி

5

7

6

1413 ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*
அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*
மற்று அவன் அகல் விசும்பு அணைய **
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*
அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-6

பெரிய திருமொழி

5

7

7

1414 சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*
கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரி சிலை வளைய அடு சரம் துரந்து*
மறி கடல் நெறிபட* மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-7

பெரிய திருமொழி

5

7

8

1415 ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய்* ஒருகால்
உடைய தேர் ஒருவன் ஆய்* உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து* இலங்கை
மலங்க அன்று அடு சரம் துரந்து **
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*
பகலவன் ஒளி கெடப்* பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*-
அரங்க மா நகர் அமர்ந்தானே-8

பெரிய திருமொழி

5

7

9

1416 பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* ஒருகால்
பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய்* மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
மணி முடி வானவர்-தமக்கு
சேயன் ஆய் ** அடியோர்க்கு அணியன் ஆய் வந்து* என்
சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*
-அரங்க மா நகர் அமர்ந்தானே-9

பெரிய திருமொழி

5

7

10

1417 ## பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*
பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*
அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்*
மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும்
பழவினை பற்று அறுப்பாரே-10

பெரிய திருமொழி

5

8

1

1418 ## ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
இரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து *
மாழை மான் மட நோக்கி உன் தோழி*
உம்பி எம்பி என்று ஒழிந்திலை ** உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்*-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-1

பெரிய திருமொழி

5

8

2

1419 வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*
மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை* உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்*
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு ** என்று
கோது இல் வாய்மையினாயொடும் உடனே*
உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்*
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-2

பெரிய திருமொழி

5

8

3

1420 கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*
வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப **
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்*-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-3

பெரிய திருமொழி

5

8

4

1421 நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் *
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து **
வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர்*
கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-4

பெரிய திருமொழி

5

8

5

1422 மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*
மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்*
துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து **
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*
போதுவாய் என்ற பொன் அருள்* எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்*
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-5

பெரிய திருமொழி

5

8

6

1423 மன்னு நான்மறை மா முனி பெற்ற
மைந்தனை* மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி* நின் சரண் என சரண் ஆய்*
தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா **
பின்னை என்றும் நின் திருவடி பிரியா
வண்ணம்* எண்ணிய பேர் அருள்* எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்*-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-6

பெரிய திருமொழி

5

8

7

1424 ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்*
கண்டு நீ தருவாய் எனக்கு என்று **
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய *
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*-
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்*-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-7

பெரிய திருமொழி

5

8

8

1425 வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*
எந்தை நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப **
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்
செய்து* உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்*
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-8

பெரிய திருமொழி

5

8

9

1426 துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்*
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு
ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-9

பெரிய திருமொழி

5

8

10

1427 ## மாட மாளிகை சூழ் திருமங்கை
-மன்னன்* ஒன்னலர்-தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானை **
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*
எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே-10

பெரிய திருமொழி

6

6

9

1506 தார் ஆளன் தண் அரங்க ஆளன்* பூமேல்
தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன்* ஆயிரம் பேர் உடைய ஆளன்*
பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர் **
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே-9

பெரிய திருமொழி

7

3

4

1571 உரங்களால் இயன்ற மன்னர் மாள *
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று *
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
எம்பிரானை * வம்பு ஆர் புனல் காவிரி **
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி *
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று *
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு
அன்றி * என் மனம் தாழ்ந்து நில்லாதே-4

பெரிய திருமொழி

8

2

7

1664 தரங்க நீர் பேசினும் * தண் மதி காயினும் *
இரங்குமோ? * எத்தனை நாள் இருந்து எள்கினாள் **
துரங்கம் வாய் கீண்டு உகந்தான் * அது தொன்மை * ஊர்
அரங்கமே என்பது * இவள்-தனக்கு ஆசையே-7

பெரிய திருமொழி

9

9

2

1829 புனை வளர் பூம் பொழில் ஆர் * பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை * மூவுலகும் படைத்த * முதல் மூர்த்தி-தன்னை **
சினை வளர் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்றான் *
கனை கழல் காணும்கொலோ-* கயல் கண்ணி எம் காரிகையே?-2

பெரிய திருமொழி

11

3

7

1978 கண்ணன் மனத்துள்ளே * நிற்கவும் கை வளைகள் *
என்னோ கழன்ற? * இவை என்ன மாயங்கள்? **
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க * அவன் மேய
அண்ணல் மலையும் * அரங்கமும் பாடோமே?

பெரிய திருமொழி

11

8

8

2029 ## அணி ஆர் பொழில் சூழ் * அரங்க நகர் அப்பா!- *
துணியேன் இனி * நின் அருள் அல்லது எனக்கு **
மணியே மணி மாணிக்கமே * மதுசூதா!- *
பணியாய் எனக்கு உய்யும் வகை-* பரஞ்சோதீ-8

திருக்குருந்தாண்டகம்

1

1

7

2038 இம்மையை மறுமை-தன்னை *எமக்கு வீடு ஆகி நின்ற *
மெய்ம்மையை விரிந்த சோலை * வியன் திரு அரங்கம் மேய **
செம்மையை கருமை-தன்னை *திருமலை ஒருமையானை *
தன்மையை நினைவார் என்-தன் *தலைமிசை மன்னுவாரே-7

திருக்குருந்தாண்டகம்

1

1

12

2043 ஆவியை அரங்க மாலை *அழுக்கு உடம்பு எச்சில் வாயால் *
தூய்மை இல் தொண்டனேன் நான் *சொல்லினேன் தொல்லை நாமம் **
பாவியேன் பிழைத்தவாறு என்று *அஞ்சினேற்கு அஞ்சல் என்று *
காவிபோல் வண்ணர் வந்து *என் கண்ணுளே தோன்றினாரே-12

திருக்குருந்தாண்டகம்

1

1

13

2044 இரும்பு அனன்று உண்ட நீரும் *போதரும் கொள்க *என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம் *அகன்றன என்னை விட்டு **
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த *அரங்க மா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டுகொண்டு *என் கண்-இணை களிக்குமாறே-13

திருக்குருந்தாண்டகம்

1

1

19

2050 பிண்டி ஆர் மண்டை ஏந்தி *பிறர் மனை திரிதந்து உண்ணும் *
முண்டியான் சாபம் தீர்த்த *ஒருவன் ஊர் **உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் *கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் *உய்யல் அல்லால் *மற்றையார்க்கு உய்யல் ஆமே?-19

திரு நெடுந்தாண்டகம்

1

1

11

2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் *
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்*
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்*
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் **
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்*
மட மானை இது செய்தார்-தம்மை* மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!*-
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?-11

திரு நெடுந்தாண்டகம்

1

1

12

2063 நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்*
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்*
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்*
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் **
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் *
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்*
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்*
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே-12

திரு நெடுந்தாண்டகம்

1

1

14

2065 ## முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை **
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்*
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று*
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே-14

திரு நெடுந்தாண்டகம்

1

1

18

2069 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்*
கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர்* பித்தர்
பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் **
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்*
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்*
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே-18

திரு நெடுந்தாண்டகம்

1

1

19

2070 முற்று ஆரா வன முலையாள் பாவை* மாயன்
மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்* தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்*
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் **
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்*
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி*
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்*
பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே-19

திரு நெடுந்தாண்டகம்

1

1

23

2074 உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்*
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன **
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக் *
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது*
புள் ஊரும் கள்வா! நீ போகேல் என்பன் *
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே-23

திரு நெடுந்தாண்டகம்

1

1

24

2075 இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!*-
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட*
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் *
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ **
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி*
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து*
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே-24

திரு நெடுந்தாண்டகம்

1

1

25

2076 மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்*
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்*
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே*
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி **
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்*
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு*
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே*
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே-25

முதல் திருவந்தாதி

1

1

6

2087 ஒன்றும் மறந்தறியேன்* ஓத நீர் வண்ணனை நான்*
இன்று மறப்பனோ ஏழைகாள்? ** அன்று
கரு-அரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன் *
திருவரங்கம் மேயான் திசை -6

இரண்டாம் திருவந்தாதி

1

1

28

2209 மனத்து உள்ளான் வேங்கடத்தான் * மா கடலான் * மற்றும்
நினைப்பு அரிய * நீள் அரங்கத்து உள்ளான் ** எனைப் பலரும்
தேவாதி தேவன்* எனப்படுவான்* முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன் -28

இரண்டாம் திருவந்தாதி

1

1

46

2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள்
பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** – பயின்றது
அணி திகழும் சோலை* அணி நீர் மலையே*
மணி திகழும் வண் தடக்கை மால் -46

இரண்டாம் திருவந்தாதி

1

1

70

2251 தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** – தமர் உள்ளும்
மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே*
ஏ வல்ல எந்தைக்கு இடம் -70

இரண்டாம் திருவந்தாதி

1

1

88

2269 திறம்பிற்று இனி அறிந்தேன் * தென் அரங்கத்து எந்தை *
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் ** – திறம்பாச்
செடி நரகை நீக்கி * தாம் செல்வதன் முன் * வானோர்
கடி நகர வாசல் கதவு -88

மூன்றாம் திருவந்தாதி

1

1

62

2343 விண்ணகரம் வெஃகா * விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை ** – மண்ணகத்த
தென் குடந்தை * தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62

நான்முகன் திருவந்தாதி

1

1

3

2384 பாலில் கிடந்ததுவும் * பண்டு அரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்? ** – ஞாலத்து
ஒரு பொருளை * வானவர் தம் மெய்ப் பொருளை* அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு (3)

நான்முகன் திருவந்தாதி

1

1

30

2411 அவன் என்னை ஆளி * அரங்கத்து அரங்கில்*
அவன் என்னை எய்தாமல் காப்பான் ** – அவன் என்னது
உள்ளத்து* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்து அரவு அணையின்மேல் -30

நான்முகன் திருவந்தாதி

1

1

36

2417 ## நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்*
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் ** – நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் * ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான் (36)

நான்முகன் திருவந்தாதி

1

1

60

2441 ஆள் பார்த்து உழிதருவாய் * கண்டுகொள் என்றும் * நின்
தாள் பார்த்து உழி தருவேன் தன்மையை ** – கேட்பார்க்கு
அரும் பொருளாய் * நின்ற அரங்கனே! * – உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் -60

திருவிருத்தம்

1

1

28

2505 தண் அம் துழாய்* வளை கொள்வது யாம் இழப்போம்* நடுவே
வண்ணம் துழாவி* ஓர் வாடை உலாவும் ** வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா* அருளாய்*
எண்ணம் துழாவுமிடத்து* உளவோ பண்டும் இன்னன்னவே?28

சிறிய திருமடல்

1

1

34

2706 நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே * மதிள் கச்சி ஊரகமே பேரகமே *
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே *
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *
ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை-34

பெரிய திருமடல்

1

1

63

2773 மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி *
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை *
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை *
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை * மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை *
மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63

திருவாய் மொழி

7

2

1

3464 ## கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*
கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*
தாமரைக் கண் என்றே தளரும் **
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்*
இரு நிலம் கை துழா இருக்கும்*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் !*
இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)

திருவாய் மொழி

7

2

2

3465 என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
என்னும்* கண்ணீர் மல்க இருக்கும்*
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்?
என்னும்* வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் **
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்*
முகில்வண்ணா தகுவதோ? என்னும்*
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்*
என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)

திருவாய் மொழி

7

2

3

3466 வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும்*
வானமே நோக்கும் மையாக்கும்*
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட *
ஒருவனே என்னும் உள் உருகும் **
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்*
காகுத்தா கண்ணனே என்னும்*
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்!*
இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)

திருவாய் மொழி

7

2

4

3467 இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்*
எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்*
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்*
கடல்வண்ணா கடியைகாண் என்னும் **
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்*
வந்திடாய் என்று என்றே மயங்கும்*
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்*
இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)

திருவாய் மொழி

7

2

5

3468 சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*
திருவரங்கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும்* ஆங்கே மழைக்கண் நீர் மல்க*
வந்திடாய் என்று என்றே மயங்கும் **
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே*
அலை கடல் கடைந்த ஆர் அமுதே*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*
தையலை மையல் செய்தானே (5)

திருவாய் மொழி

7

2

6

3469 மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே
என்னும்* மா மாயனே என்னும்*
செய்ய வாய் மணியே என்னும்* தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும் **
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும்* விண்ணோர் முதல் என்னும்;*
பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய்*
பாவியேன் செயற்பாலதுவே (6)

திருவாய் மொழி

7

2

7

3470 பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்*
பற்றிலார் பற்ற நின்றானே*
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட *
கடல்வண்ணா கண்ணனே என்னும் **
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும்* என் தீர்த்தனே என்னும்*
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்*
என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)

திருவாய் மொழி

7

2

8

3471 கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்று ஏந்தி
கோ நிரை காத்தவன் என்னும்*
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்*
அஞ்சன வண்ணனே என்னும் **
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*
எங்ஙனே நோக்குகேன்? என்னும் *
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்*
என் செய்கேன் என் திருமகட்கே? (8)

திருவாய் மொழி

7

2

9

3472 என் திருமகள் சேர் மார்வனே என்னும் * என்னுடை ஆவியே என்னும் *
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட * நிலமகள் கேள்வனே என்னும் **
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட * ஆய்மகள் அன்பனே என்னும் *
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே * தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)

திருவாய் மொழி

7

2

10

3473 முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்*
மூவுலகு ஆளியே என்னும்*
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்*
நான்முகக் கடவுளே என்னும் **
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்*
வண் திருவரங்கனே என்னும் *
அடி அடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே (10)

திருவாய் மொழி

7

2

11

3474 ## முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன்* மொய் புனல் பொருநல்*
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன்* வண் பொழில் சூழ்
வண் குருகூர்ச் சடகோபன் **
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை*
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்*
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (11)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

2

3894 ## கள் ஆர் பொழில் தென் அரங்கன்* கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா* மனிசரை நீங்கி ** குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன்* மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு* ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

16

3908 தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து* தலம் முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து* அளித்தவன் காண்மின் ** அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்*
வாழ்கின்ற வள்ளல்* இராமாநுசன் என்னும் மா முனியே (16)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

35

3927 நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே* சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன் ** பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன்* மன்னு மா மலர்த்தாள்
அயரேன்* அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? (35)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

42

3934 ஆயிழையார் கொங்கை தங்கும்* அக் காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை* வந்து எடுத்தான் இன்று ** மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கன் என்னும்
தூயவன்* தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே (42)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

47

3939 இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று* இவ் உலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் **என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான்* எனக்கு ஆரும் நிகர் இல்லையே (47)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

49

3941 ஆனது செம்மை அறநெறி* பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி* இறந்தது வெம் கலி ** பூங் கமலத்
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்*
தான் அதில் மன்னும்* இராமாநுசன் இத் தலத்து உதித்தே (49)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

55

3947 கண்டவர் சிந்தை கவரும்* கடி பொழில் தென் அரங்கன்*
தொண்டர் குலாவும் இராமாநுசனை ** தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்*
கொண்டலை மேவித்தொழும்* குடி ஆம் எங்கள் கோக்குடியே (55)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

57

3949 மற்று ஒரு பேறு மதியாது* அரங்கன் மலர் அடிக்கு ஆள்
உற்றவரே* தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை **
நல் தவர் போற்றும் இராமாநுசனை* இந் நானிலத்தே
பெற்றனன்* பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே (57)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

69

3961 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து* முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு ** அவை என் தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்* தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே (69)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

75

3967 செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும்* திரு அரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி ** நம் கண்முகப்பே
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்* நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து* இராமாநுச என்னை முற்றும் நின்றே (75)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

81

3973 சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ்த்* தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு ** அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச* இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு* இல்லை மாறு தெரிவுறிலே (81)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

91

3983 மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும்* அவப் பொருள் ஆம்
இருள் சுரந்து எய்த்த* உலகு இருள் நீங்கத் ** தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான்* எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே (91)

இராமாநுச நூற்றந்தாதி

1

1

108

4000 ## அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்* அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர்ப்* பாவையைப் போற்றுதும் ** பத்தி எல்லாம்
* பொங்கிய கீர்த்தி* இராமாநுசன் அடிப் பூ மன்னவே (108)

 

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on January 9, 2023

Thanks for sharing swamy

  • Liked by
Reply
Cancel