Ramayana

Updated on August 25, 2020 in Holy Books
3 on August 23, 2020

அடியேனுக்கு சந்தேகம் என்ன என்றால் ஸம்பாதியின் இறகுகள் எரிந்து விட்ட நிலையில் கீழே விழ ,முனிவரின் கருணையால் அந்த பர்வதத்தில் இருப்பது சீதையை தேடி வரும் வானரர்களிடம் தெரிவித்த உடன் இறக்கை முளைத்து பறந்து விட்டது,அந்த சம்பாதி பறக்கும் பொழுது அனுமனை சுமந்து சென்று இலங்கையில் விட்டிருக்கலாம் ஏன் அப்படி செய்யவில்லை,அதன் சகோதரன் ஜடாயுவுக்கு கிடைத்த கைங்கர்ய பிராப்தம் இதற்க்கு கிடைத்தும் பயன் படுத்தவில்லை,இதைதான் பிராப்தம் என்கிறோமா,இதைபற்றி சற்று விளக்கவும்

அடியேன் வேளுக்குடி தாசன்

 
  • Liked by
Reply
2 on August 23, 2020

நமஸ்காரம்
அடியேனுக்கு மேலும் ஒரு விசாரம் மனதில் எழுகிறது
கழுகு அரசன் சம்பாதியே பறந்து இலங்கை சென்று சீதையின் இருப்பிடம் அறிந்து வரலாம்,

கேள்வி என்ன என்று தெளிவு படுத்தவும். பலதும் நடந்திருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் நடந்ததைப் பற்றித்தான் நாம் பேச முடியும்

on August 25, 2020

ஜடாயவுக்கு கிடைத்த அதாவது ராமபிரான் கைகளிலாலே அந்திம ஸ்ம்ஸ்காரம் நடந்தது,(உயிர் தியாகத்தின் மஹிமை)ஆனால் அதன் சகோதரன் சம்பாதிக்கு கிடைக்கவில்லை,இதற்க்கு பெயர் கொடுப்பினை அல்லது பிராப்தம் என்கிறோமா?ஒரே குடும்பத்தில் கூட பிறந்த சகோதர்களில் ஒருவர் செல்வந்தராகவும் ஒருவர் கஷ்ட அவஸ்தையிலும் மற்றொருவர் ஞானவான் ஆகவும் இருக்கிறார்,இது மரத்திற்க்கும் பொருந்துவதை பார்கிறேன் அடியேன் குடிசையில் இரண்டு தென்னை மரங்கள் உள்ளது, இரண்டில் ஒன்று காய்க தொடங்கி விட்டது ,இன்னொரு மரம் காய்க்வில்லை இதுதான் பிராப்தமா,இது பற்றி விளக்கம் தேவை.

Show more replies
  • Liked by
Reply
Cancel