Doubt in Srimad Ramayanam

Updated on April 2, 2022 in Holy Books
7 on March 26, 2022

ஸ்வாமியின் திருவடிகளில் தண்டவத் ப்ரணாமங்கள்.

இராமாயண உபந்யாஸம் கேட்கும் ஸந்தர்பத்தில் அடியேனுக்கு ஒரு சிறிய ஸந்தேஹம் உண்டானது. அதை ஸ்வாமி தீர்த்து வைக்க ப்ரார்த்தனை.

*தசரதனின் இரு நிலைப்பாடு*
மஹரிஷி விஸ்வாமித்திரருக்கு எதைக் கேட்டாலும் தருவதாக வாக்களித்த தசரதன் ராமனைக் கேட்டவுடன் தரமுடியாது என்று நேரடியாகவே மறுத்து விட்டார். நீ வாக்கு தவறியவனாகி விடுவாய் என்பதற்கும் கவலைப்படவில்லை. (பின்னர் வசிஷ்டர் சொல்லி ராமனைத் தந்தது வேறு விஷயம்) வசிஷ்டர் தலையிடாவிட்டால் தசரதன் ராமனை விஸ்வாமித்ரருடன் அனுப்பி இருக்கவே மாட்டார்.

ஆனால் கைகேயியிடம் இந்த நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. பல வாதங்கள் கூறினாலும் இறுதியில் (வேறு எவரின் தலையீடு இல்லாமல்) கைகேயியின் வரத்திற்கு இசைந்தாரே.

விஸ்வாமித்ரருக்கு தந்த வாக்கையே மீறத் துணிந்தவர் கைகேயிக்கு தந்த வாக்கை மீற யோசிப்பானென்?

கேள்வி தவறாக இருப்பின் க்ஷமிக்கவும்.

தந்யோஸ்மி

அடியேன் தாஸன்,
வேங்கடாசலம்

 
  • Liked by
  • vikraminside
  • Govindan Narayanan
  • enpanifan
Reply

வேங்கடாசலம் ஸ்வாமி நமஸ்காரம்.

தசரத மஹாராஜா தன் ராஜ தர்மத்தையும் மூதாதையரின் பெருமையையும் என்றும் ஓங்கி உயர பிடிப்பவர். அவர், தன் அம்பினால் காட்டில் ஒரு சிறுவன் மாண்டான் என்று அறிந்ததும் அதை மறைத்து அங்கிருந்து ஓடிவிடவில்லை; தானே அவன் பெற்றோர்ரிடம் சென்று, தன் தவறை ஒப்புக்கொண்டு அதற்கான தண்டணையை ஏற்றவர். அவர் எப்பேர்பட்ட தர்ம சீலர் என்பதற்கு இது சிறந்த சான்று.

விஷ்வாமித்திரர் வந்த போது தன் தெய்வீக புதல்வனிடம் கொண்ட பாசத்தால் சற்றே மனம் கலங்கி தர்மம் தவர சஞ்சலப்பட்டாலும், வசிஷ்டர் தர்மத்தை நினைவுபடுத்தியதும்  அவர் சஞ்சலத்தை வென்றார்.

அதே போல், கைகேகியிடமும் பல விதத்தில் மறுத்துப்பார்தார். கைகேகி “இப்படி வாக்கு தவறினால் உன் ராஜ தர்மம் என்ன ஆவது? உன் மூதாதையர் பெருமை என்ன ஆவது?” என்று கூறி தசரதரை மடக்கி சம்மதிக்க வைத்தார்.

இரு நிகழ்வுகளிலும் அவர் ராமர் மீது கொண்ட பாசத்தால் சஞ்சலப்பட்டாலும், தர்மத்தை மீறவில்லை.

அவர் சாதாரண நபரை போல நினைத்தப்படி தர்மத்தை மீறுபவராக இருந்தால், ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற தர்மத்தை உணர்த்த வந்த அவதாரத்திற்கு அவரையா பகவான் தந்தையாக தேர்ந்தெடுத்திருப்பார்?

தசரதர் தர்ம சீலர்! 

அடியேன் தாசன்.

on March 30, 2022

🤔 Why Dasarathan not eka pathni vrathan?
While Raman Eka Pathni vrathan Swamy?

Parashuramar bayam? 🤔 Or different Sankalpam?

Adiyen feel it’s SriRam’s nature to choose and make the kulam prideful.

Dasarathar is human. He revoked father son relationship with Parama BhAgavathan Bharathan.

SriRam rectified it later when dad was in heaven.

Dasarathar great emperor but still human bound to do mistakes. SriRam’s father status does not qualify him to be shuddha sathvam.

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on March 30, 2022

Sabaash seriyaana kelvi

சபாஷ். சரியான கேள்வி

  • Liked by
Reply
Cancel
3 on March 30, 2022

வேங்கடாசலம் Swamy

On a lighter note , this shows how much importance we gave to “Woman empowerment” from thousands of years before 😊

Best way to deal with wife is to listen

Dasanudasan

on April 1, 2022

Swamin,

Our swamy replied by email as below (as given within quotes):

” 1. He had a niyata karma – curse – that he would be separated from his son. This would take effect only if Kaikeyi’s boon was kept up
2. It was a boon to Kaikeyi and only a word to Vishwamitra.  “

Also as I understand that while Dasarathan was trying to pacify Kaikeyi (before she informed him about her wish), Dasarathan voluntarily made prathigyai that he will satisfy her wish and he had invoked Ram’s name (i.e., he made sathyam in name of Ram that he will satisfy Kaikeyi’s wish).  After this only Kaikeyi reminded him of the 2 boons and asked for the varams.

on April 1, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Ok Swamin
Swamy has emailed means no further discussion

Dasanudasan

on April 2, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

If adiyen remember correctly, in one of the very old upanyasams Swamy said ” Dasarathar did puthra kAma ishti yAgam that itself is against nature”.

The context was , if the life is to be without son , then why force a son by doing yagam?

Secondly, by correlating ”
niyata karma – curse – that he would be separated from his son ”

If life had to be without son then niyata karma cannot be separated from son. I don’t know meaning of “Niyata Karma”.

Common factor intersecting these two points “Everything is pre-destined” including the so-called Jeeva SwAthanthriyam of emperor Dasarathan.

There is nothing like “our choice” then.

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel