ஸ்ரீரங்கம்

Updated on August 27, 2018 in Festivals
4 on August 24, 2018

நமஸ்காரம் ஸ்வாமி
அடியேன் மகாலெக்ஷ்மி ஸ்ரீரங்கத்தில் பூச்சாண்டி சேவை என்று செய்கிறார்கள் அது எதற்காக செய்கிறார்கள் காரணம் எதாவது இருந்தால் அதை பற்றி தேவரீர் சொல்ல வேண்டும் ஸ்வாமி .
அடியேன் கேள்வி கேட்ட விதத்தில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் ஸ்வாமி.
அடியேன் ராமானுஜ தாஸ்யை
திரு.கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 
  • Liked by
Reply

ஶ்ரீமதே ராமாணுஜாய நம: ஶ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளே சரணம்!

அங்கோபாங்க (பூச்சாண்டி சேவை) ஆண்டுதோறும் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு அமுதுபடிகள், வஸ்திரங்கள், திருவாரா தனங்கள், அர்க்ய பாத்ய ஆசமனீயம், போன்ற உபசாரங்கள், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் குறைபாடுகள் நேர வாய்ப்புண்டு. இவ்வாறு ஏற்படும் குறைபாடுகளைப் போக்குதற்காக ஆகமங்களில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “பெரியதிருப்பாவாடை” என்ற நிகழ்ச்சியும், வஸ்திரங்கள் அணிவிப்பதில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்காகக் கார்த்திகை கைசிக ஏகாதசியன்று “360 பட்டு போர்த்துதல்” என்ற நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது.
உள்ளே இருக்கும் ஒவ்வொரு மூர்த்திக்கும் 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கையில் ஒவ்வொரு திருவாராதனத்தின் முடிவிலும் பெரியபெருமாளுக்குத் திருமுடி முதல் திருவடி வரையில் பவித்ரம் சாற்றப்படும். இன்றைய வேதபாராயணமும் முந்தைய தினத்தைப்போலவே. ஆனால், துவாதசியாகையால் அச்சித்ரம், அச்வமேதங்களுக்கு பதிலாக காடகம் பாராயணம் செய்யப்படும்.
மற்றைய மூர்த்திகளுக்கும் பவித்திரம் சாற்றிய பிறகு, தாயார் ஸந்நிதிக்கு மேளதாளத்துடன் பவித்திரம் கொண்டு செல்லப்பட்டு அங்கே தாயார் திருமேனிகளுக்கு சாற்றப்படும் வரையில் பெரியபெருமாளும் நம் பெருமாளும் பல பவித்திரங்களோடு ஜனங்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டிருப்பார்கள்.
வனமாலை, அங்கோபாங்கம் முதலிய பவித்திரங்களோடு இன்று பெரியபெருமாள் சேவை சாதிப்பார்.
இந்த சேவைக்குப் பூச்சாண்டி சேவை என்ற பெயர் வழங்குகிறது. (பெரியபெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. சிறு குழந்தைகள் புதியதோர் பழக்கமில்லாத தோற்றத்தைக் காணும்போது பூச்சாண்டி என்று சொல்லும். அதுபோலே இன்று பெரியபெருமாள் திருமேனியில் திருப்பாதங்கள் தொடங்கி திருமுடி ஈறாக நூற்றுக்கணக்கான பவித்ரங்கள் சாற்றப்பட்டிருக்கும். இத்துடன் மூலவரும், உத்ஸவரும் பல வண்ணங்கள் கொண்ட பட்டினால் ஆன பவித்ர மாலையையும் சாற்றிக் கொண்டிருப்பர்.)

அடியேன்,
பத்ரி நாராயண ராமாணுஜ தாசன்!

on August 26, 2018

???

Show more replies
  • Liked by
Reply
Cancel

Sri Velukkudi Swamigal, please forgive this adiyen, if I have said anything wrong?

  • Liked by
Reply
Cancel

Srimathe Ramanujaya Namaha,

Sri Velukkudi Krishnan Swami Guruve Namaha,

 

Dear Ramanuja Dasa,

 

Super summary BhagavAta.

Since, Sri Velukudi Krishnan Swami follows “KrupaMaatra PrasannaCharyar” Swami Ramanujar, Sri Velukkudi Swami by Maanasikam says BhagavatAs summary is beautiful due to BhagvAtas Acharya Krupai.

 

Swami ThiruvAdiyil Kainkaryame ParamaPurushartham

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan,

Uyya Oraey Vazhi UdayavAr THiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu

  • Liked by
Reply
Cancel