தைத்திரீய உபநிஷத்து

Updated on September 6, 2020 in Holy Books
3 on August 26, 2020

அடியேன் நமஸ்காரம்
நமது சம்பிரதாயப்படி தைத்திரிய உபநிஷத்து சேவிக்கும்போது ஆமாயந்துபிரம்மசாரின ஸ்வாஹா என்று மட்டுமே கூறுகிறோம், ஆனால் ஸ்மார்த்த சம்பிரதாயப்படி ஆமாயந்து,விமாயந்து,ப்ரமாயந்து,தமாயந்து,சமாயந்து என்று பல லக்ஷனங்கள் பொருந்திய பிரம்மசாரிகளை ஆச்சாரியர் அழைக்கிறார், ஏன் இந்த வேறுபாடு ,இதன் தாத்பரியம் என்ன ?
அடியேன்

 
  • Liked by
Reply
2 on August 27, 2020

அடியேன் நமஸ்காரம்
தைத்திரிய உபநிஷத் சீஷாவல்லியில் வரும் மந்திரத்தை தந்துள்ளேன், அடியேன் பார்தவரை புத்தக பிரதிகளில் ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா தொடங்கி சமாயந்து ப்ரஹ்மசாரின ஸ்வாஹா வரையில் முடிகிறது,ஆனால் நமது சம்பிரதாயப்படி ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா மட்டுமே சொல்கிறோம்,ஏன் இந்த பாட பேதம்,இதற்கு ஏதேனும் தாத்பர்யம் இருக்கும் போல் தோன்றுகிறது

kurvana.achiramatmanah . vasa{\m+} si mama gavashcha .
annapane cha sarvada . tato me shriyamavaha .
lomasham pashubhih saha svaha . a ma yantu brahmacharinah svaha .
vi ma.a.ayantu brahmacharinah svaha .
pra ma.a.ayantu brahmacharinah svaha .
damayantu brahmacharinah svaha .
shamayantu brahmacharinah svaha .. 2..

on August 30, 2020

அடியேன் நமஸ்காரம்
அடியேன் மனதில் ஒரு என்னம் உதிக்கிறது ,தயக்கம் தடுக்கிறது இருப்பினும் ஆர்வம் வருகிறது,சிறியவன் முயற்ச்சி செய்கிறேன் தவறு இருப்பின் திருத்தவும் ,நமது வைனவத்தில் ஆழ்வார் பாசுரம் கொண்டு பல விஷயங்கள் நிருபனம் செய்யபடுவதுண்டு,அதில் கண்ணி நுண் சிறுத்தாம்பு பாசுரத்தில் பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாக திருத்தி பணிகொள்வான் என்கிறார் மதுரகவிகள்,இதில் ஆச்சாரியன் தனது சீடர் இடத்தே பல குறைபாடுகள் இருந்தாலும் (சம,தம போன்ற லக்ஷனங்கள் இல்லை என்றாலும்)அதை அருள் பார்வையாலே சரி செய்து திருத்தி பணி கொள்கிறார் ஆதலாலேயே நாம் தைத்திரிய உபநிஷத் சேவிக்கும் போது ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா மட்டுமே சொல்கிறோம், குரு மாணவர்கள் வரட்டும் என்று மாத்திரமே அழைக்கிறார் ,அவர்கள் பாங்கானவர்களாக இல்லையென்றாலும் திருத்தி பணி கொள்கிறார்,ஆனால் நமது லொளகீக கல்வியில் நடப்பது என்ன என்றால் நல்ல அறிவுள்ள வித்யார்த்திகளை கொண்டு நுறு சதவிகித தேர்ச்சி, அனைவரும் 99% மார்க் இதல்ல சாதனை
Average below average வித்யார்த்தியை 99% மார்க் எடுக்க வைப்பேதே அத்யாபகர் திறமை உள்ளது
அது போல்தான் அத்யாத்மிக கல்வியிலும் சாதாரண மாணவனை மேல் கொண்டு வர வேண்டும் அதுவே ஆச்சாரியர்கள் செய்யும் கருனை ,அதனால் விமாயந்து,பிரமாயந்து,தமாயந்து,சமாயந்து கூறுவதில்லை, இதற்க்கு பிரமாணம் அடியேன் அறியேன்,(மதுரகவி பாசுரம் பிரமாணமாக எடுத்து மேற்கோள் காட்டி உள்ளேன்)சிறு முயற்சி, தவறெனில் திருத்தவும்
அடியேன் தாசன்

on September 6, 2020

அடியேன் வேளுக்குடி தாசன்

வேளுக்குடி சுவாமி மற்றும் வைனவ மஹநீயர் அனைவருக்கும் நமஸ்காரம்
அடியேன் பற்றிய சிறு முகவுரை(தேவையா!!!!!)
இந்த தர்ம சந்தேகம் குழுவில் அடியேன் சிறது காலம் (1 மாதத்திற்க்குள்)முன்பு சேர்ந்தேன்
வேளுக்குடி தாசன் என்று புனை பெயர் வைக்க காரணம் உண்டு, ஒன்று அவர் வித்வத்வம் மற்றும் அவர் தொண்டு மற்றொரு காரணம் சுவாமியின் ஊரான வேளுக்குடிக்கு மிக அருகிலேயே அடியேனின் கிராமமும்,வேளுக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் வேளுக்குடிக்கு அடுத்த கிராமம் சித்தனங்குடி,அதற்கு அடுத்த கிராமம் மூலங்குடி இதுவே அடியேனின் ஊர்,சிறு கிராமம் தென்னாச்சாரிய சம்பிரதாயம் கொண்ட வைனவ பிராமணர்கள் மற்றும் ஸ்மார்தர்கள் உள்ள ஊர்,ஊரில் சிறு பெருமாள் கொயில் உண்டு ,பெருமாள் பெயர் லக்ஷ்மி நாராயணன் உற்சவர் வரதராஜன் (உற்சவர் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளார்)
வேளுக்குடி சுவாமிகள் நமது ஊரை சேர்ந்தவர் என்ற அபிமானம் ஆதலால் இந்த புனை பெயர்

அடியேன் பள்ளி படிப்பு படித்தது திருவாரூர் civil engineering in chidambaram
எனது வயது 50,வேலை Mumbai Delhi KSA UAE QATAR ZAMBIA LIBERIA மற்றும் Chennai
Qatar,Chennai and Delhi Metro rail கட்டுமானத்தில் அடியேன் பங்களிப்பு உண்டு,இது professional acumen ,spiritual acumen nothing
ஆழ்வார் கூறுவதுபோல்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்

அடியேனின் ஆச்சாரிய திருவடி சமபந்தம்
வானமாமலை ஜியர் கலியன் சுவாமி
வேதம் பிரபந்தம் எதுவும் கேட்பது மட்டுமே முறையாக கற்க்கவில்லை,வேளுக்குடி சுவாமியை யாம் அறிவோம் அவர் எம்மை அறியார்(விவேக் காமெடி நினைவு கொள்க)வேளுக்குடி சுவாமி உபண்யாசம் மாம்பலம் மற்றும் சில இடங்களில் கேட்டுள்ளேன் அப்பொழுது ஆசிர்வாதம் வாங்கியுள்ளேன்,சுவாமியின் கோயில் கைங்கைர்யத்தில் கோயிலடியில் தங்கி குடும்பத்துடன் கைங்கைர்யம் செய்துள்ளேன்
YouTube channel ல் சுவாமியின் உபண்யாசம் கேட்கிறேன்,வேலை நிமித்தமாக வெளி ஊரிலியே காலம் கழிந்துவிட்டது ,குடும்பம் Chennai வளசரவாக்கம்,Qatar ல்இருந்து lockdown முன்பு வந்தேன் திரும்பி செல்லமுடியாமல் வேலை இழந்துவிட்டேன்,ஓய்வு நேரம் இருப்பதால் இறை பணியில் ஈடுபட்டுள்ளேன்,மகன் NIT Trichy ல் BE Civil முடித்துவிட்டு UAE ல் போன வருடம் CAMPUS முலமாக வேலைக்கு சென்றான் LOCKDOWN ல் அங்கேயே இருந்தால் அவன் வேலை இழக்கவில்லை
மற்றும் அடியேனின் சஹதர்மினி House wife, அடியேனுக்கு ஒரு மகள் MBA படத்து கொண்டிருக்கிறார்
வேளுக்குடி சுவாமியின் ஆசிர்வாதம் பெற விரும்பும் சிஷ்யன்

Show more replies
  • Liked by
Reply
Cancel