உத்தராயணம்

Updated on October 8, 2020 in General
2 on October 7, 2020

‌srimathe ramanujaya namaha

நமஸ்காரம்
ஸ்வாமி,
கிருஷ்ண பரமாத்மா கீதையில், உத்தராயணத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்று கூறுகிறார்.

எனில் நாத்திகர்களும், வைதீக மதத்தை சாராதவர்களும், பக்தர்கள் அல்லாதவர்களும் கூட உத்தராயணத்தில் மடிகிறார்கள். எனில் இவர்களும் பரமபதத்தை அடைகின்றனரா??

அடியேன் ராமானுஜ தாஸன்

 
  • Liked by
Reply

சுந்தர ராமானுஜ ஸ்வாமி, நமஸ்காரம்.

தாங்கள் பகவத் கீதையில் 8 ஆம் அத்தியாத்திலிருந்து (ஸ்லோகம் 23 – 26) குறிப்பிடுகிறீர்கள்.

யத்ர காலே த்வாநாவ்ருத்திம் ஆவ்ருத்திஞ்சைவ யோகிந: |

ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப ||              (23)

அக்நிர் ஜ்யோதிரஹச் சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் |

தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்மவிதோ ஜநா:  ||                      (24)

 

இது யோகிகளையும் ப்ரஹ்மனை உணர்ந்தவர்களையும் குறிக்கிறதே அன்றி நாத்திகர்கள் உட்பட்ட்ட வெகு ஜனத்தை குறிப்பிடவில்லை. 

இதில் முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பகவானை பக்தி மார்கத்திலோ சரணாகதி மூலமாகவோ அனுகுபவர்களும்  ‘யோகிந / ப்ரஹ்மவிதோ’ என்ற குறிப்பில் அடங்காதவர்கள். பக்தர்களையும் சரணகதர்களையும் அக்கரை சேர்ப்பது பெருமாளின் அக்கறை. நாம் ஏதும் முயற்சிக்க தேவை இல்லை. 

இங்கு யோகிந / ப்ரஹ்மவிதோ என்பது ஜீவாத்ம அனுபவத்தில் ஈடுபடும் ‘கேவலன்’ என்பவரை குறிக்கிறது.

‘கேவலன்’ என்ற சொல்லுக்கு விளக்கம் தேவைபடலாம். 

< ரத்தினத்தை விட்டு அதன் ஒளியைப் பிரிக்க முடியாதாப் போலவும், மலரைவிட்டு அதன் மணத்தைப் பிரிக்க முடியாதாப் போலவும், பகவானை விட்டு ஜீவனைப் பிரிக்க முடியது. இதனையே “ஆப்ரதக் சித்தி விசேஷணம்து” என்பர். இப்படி இரண்டும் ஒரு தத்துவம் போல சேர்ந்திருக்க ஞானி பகவானை அனுபவிப்பதற்கும், கேவலன் ஆத்மாவை அனுபவிப்பதற்கும் வாசி என்ன?

‘பூமியின் பேரில் குடமிருக்கிறது’ ; ‘பூமியிலிருக்கும் குடம்’. இவை இரண்டுக்கும் பொருள் ஒன்றாகயிருந்தாலும், உற்று நோக்கினால் முதல் வாக்யத்தில் பூமி முக்கியம் குடம் முக்கியமில்லை; இரண்டாம் வாக்யத்தில் குடம் முக்கியம் பூமி முக்கியமில்லை எங்கிற வேறுபாட்டைக் காணலாம். கிருஷ்ணனுடன் ராமன் வந்தான் என்பதற்கும் ராமனுடன் கிரிஷ்ணன் வந்தான் என்பதற்கும் உள்ள வேறுபாடி போன்றது.

அதே போல முக்தன், ஜீவனை சரீரமாகக் கொண்ட பகவானை அனுபவிக்கிறான்; இதில் பகவான் பிரதானம். கேவலன் பகவானுக்குச் சரீரமான ஆத்மாவை அனுபவிக்கிறான். இங்கே பகவானை அப்ரதானமாகக் கொண்டு ஜீவனையே முக்கியமாகம் கேவலன் அனுபவிக்கிறான்.” >

(< > quoted from பகவத் கீதை தெளிவுரை, ஸ்ரீ உ வே காரப்பங்காடு வேங்கடாசாரிய ஸ்வாமி). 

 

பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும்

அடியேன் தாசன்.

  • Liked by
Reply
Cancel
0 on October 8, 2020

Thanks a lot, kambandasan swamy

  • Liked by
Reply
Cancel