ஆழ்வார்களுக்கு ஆச்சார்யண் பகவானா, பறவைகளா?

Updated on June 17, 2021 in Azhwars
3 on June 16, 2021

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேனுடைய நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கு அடியேனுடைய நமஸ்காரம்.

ஆழ்வார்களுக்கு தனியாக ஆச்சார்யண் என்று இல்லை, ஏனென்றால் பகவானே அவர்களுக்கு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்தார் என்றும் கேட்டிருக்கிறேன்.

ஆனால், அவர்களுடைய பாசுரத்தில், பறவைகைளயே ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்து பாடியதாகவும், அதனால் தான் அந்த பறவைகைளயே பகவானிடத்தில் தூது போக சொன்னதாகவும் கேட்டிருக்கிறேன்.

பகவானையே ஆச்சார்யணாக கொண்டபின், பறவைகளை ஆச்சார்யணாக ஏன் கொள்ள வேண்டும்?

இதில் யார் ஆழ்வார்களுக்கு ஆச்சார்யண்? பகவானா, பறவைகளா?

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
Reply

ntgk swamy நமஸ்காரம்.

அடியேனின் புரிதலின் படி, ஆழ்வார்கள் ஒவ்வொரு பொருளிலும் இறைவனை கண்டதாக தெரிகிறது. இருட்டு கண்ணனின் நிறத்தை நினைவுபடுத்துவதால் இருட்டையும் விழுந்து வண்ங்குவராம்!!

பாரதியின் காக்கைச்சிறகினிலே நந்தலாலா பாடல் வரிகளும் இதுபோன்ற ஓர் எண்ண ஓட்டத்தையே காட்டுகின்றன.

வேறு ஒரு கோணத்திலும் சிந்திந்து பார்த்தேன். அடியேனின் ஆச்சார்யனின் படத்தை நமஸ்கரிக்கும் போது, ஆச்சார்யனை நமஸ்கரிகின்றேனா அல்லது printed paperஐ நமசரிக்கின்றேனா? அல்லது printed paperஐ ஆச்சார்யனாக ஏற்கிறேன் என்று கொள்ளலாம?

ஆச்சார்யனைதான் நமஸ்கரிக்கின்றேன்; printed papeரில் ஆச்சார்யனை காண்கிறேன். என் அச்சார்யன் தான் எனக்கு ஆச்சார்யர்; paper வெறும் சாதனமே. 

இந்த தர்கத்தின் அடிப்படையில் அடியேன் புரிந்து கொள்வது, திருமழிசை ஆழ்வார், ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் தவிற மற்ற ஆழ்வார்களுக்கு சாக்ஷாத் பகவானே ஆச்சார்யனாக அருளி இருக்கிறார்.  அவர்கள் பறவைகளை தூதுவராக பார்த்திருக்கின்றனர். ஒரு நாட்டின் தூதுவரை அந்த நாட்டின் அடையாளமாகவே கொள்வது நம் வழக்கத்திலும் உள்ளதுதானே! அதுபோலவே அவர்களும் பகவானிடம் தூது செல்பவர்களை பகவானிடமிருந்து பிரித்து பார்க்கவில்லை என்று கொள்ளலாம்.

 

ஓருவேளை பகவானே பறவை உறுவில் வந்து அவர்களது பாடல்களை அனுபவித்டாரோ என்னவோ!!

அடியேன் தாசன்.

பி கு: (வேடிக்கையாக கொள்ளவும்). நாம் கூடதான் visa issue officeசின் காவலரை கூட அந்த நாட்டின் அதிபதியாகவே மரியாதை கொடுக்கிறோம்!!! நம் இலக்கின் மீது நமக்குள்ள ஆவல், அந்த இலக்கு சம்பந்தபட்ட ஒவ்வொரு பொருளுக்கும்  நாம் கொடுக்கும் மரியாதையை நிர்ணயிக்கிறது!!

 

on June 17, 2021

@கம்பன்தாசன் சுவாமி, தங்கள் விளக்கத்துக்கு அடியேனுடைய கோடி நமஸ்காரங்கள்.

Show more replies
  • Liked by
Reply
Cancel