பகவானிடம் தாய்மைக்கான பண்பு இல்லையா??

நமஸ்காரம்,பகவான் ஜீவன்கட்கு ஸ்வாதந்திரியத்தை அளித்து, அவர்கள் அதனைக்கொண்டு பாவ அல்லது புண்ய கர்மங்களை செய்வதில் தலையிடாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அதற்குறிய பலனை / தண்டனையை கொடுப்பதில் மட்டும்தலையிடுகிறாரே? இது பாரபட்ஷம் இல்லையா? இது தாய்மைக்கான பண்பு இல்லையே? இவ்வுலக தாய் கூட தன் பிள்ளைகள் தவறான வழி செல்லாமலிருக்க மிக்க ப்ரயத்தனம் படுகிறார்களே? அவர்களை விட பன்மடங்கு சிறந்த லோக மாதாவான பகவான் ஏன் அலட்சியமாக / உதாசீணனாக இருக்கிறார்?அடியேன் இராமாநுசதாசன்.