துளிசி மாடம் விளக்கு ஏற்றுதல்

Updated on June 24, 2019 in Daily rituals and practice
1 on June 23, 2019

அம்மா வீட்டில் துளசி மாடம் முத்தத்தில் இருந்தது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதனை துளசி மாடத்தில் வைப்போம்.

திருமணத்திற்கு பிறகு(around 30 years) எங்கள் வீட்டில் துளசி மாடம் வீட்டிற்குள் சுவர் அருகே உள்ளது. முத்தம் அமைப்பு இல்லை.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி துளசி மாடத்தில் விளக்கு வைப்பேன். இப்படி தான் 30 வருடங்களாக செய்து வருகிறேன்.

சமீபமாக கேள்வி பட்டேன் வீட்டிற்குள் விளக்கு ஏற்றி அதனை வெளியே எடுத்து வர கூடாது என்று… மனதில் குழப்பம்.

முத்தம் அமைப்பு இல்லாத, வீட்டுக்கு உள்ளே சுவர் அருகில் உள்ள துளசிக்கு எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் ? தயவு கூர்ந்து விளக்குக…

 
  • Liked by
Reply

ஸ்ரீ இராமானுஜ முனயே நமஹ,
ஸ்ரீவெளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி குருவே நமஹ,

அடியாருக்கு வணக்கம் பாகவதருடைய கேள்விக்கு ஸ்வாமி என்பணி #1418 “மரபுகளை கடைப்பிடிப்பதில் சிரமங்களை” இல் அருளுகிறார் .

“வீட்டிற்குள் விளக்கு ஏற்றின பினபு, வெளியே செல்லுவதற்கு முனபு விளக்கை குளிர (அணைக்க) வேண்டும். இல்லை என்றால் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் மற்ற யார்யென்னும் இருந்தால், விளக்கை கவனமாக பார்த்து கொள்ளலாம்.”

https://www.youtube.com/channel/UCELEgaFullWSr3BdtZ4mUDw

அடியேன் ஸ்ரீவெளுக்குடி கிருஷ்ண தாசன்,
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி,
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் அஸ்து

  • Liked by
Reply
Cancel
Loading more replies